சுவிட்சர்லாந்து தூதரக பெண் கடத்தல் - ராஜித சேனாரத்னவை கைது செய்துசெய்ய கோரிக்கை
சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பெண் பணியாளர் ஒருவர் கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக தகவல்களை வெளியிடும் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்துமாறு சிங்கள ராவய அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கொழும்பில் இன்று -06- இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அதன் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த பெண் கடத்திச் செல்லப்பட்டு அவரின் வாயில் துப்பாக்கியை வைத்து பல்வேறு துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாக ராஜித சேனாரத்தன தெரிவித்தார்.
எனவே நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்துமாறு சிங்கள ராவய அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
Post a Comment