ஐக்கிய நாடுகள் செயலாளர் பதவிக்கு ரணில் - உறுதிப்படுத்தினார் ஜோன் அமரதுங்க
ஐக்கிய நாடுகள் பொது செயலாளர் பதவிக்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக, சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி உண்மையானது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க உறுதிப்படுத்தியுள்ளார்.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா சபையால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும், இது குறித்து ரணில் விக்ரமசிங்க பரிசீலித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், ரணில் விக்ரமசிங்க இந்த பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே தனது தனிப்பட்ட கருத்தாகும் எனவும் ஜோன் அமரதுங்க வலியுறுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், சர்வதேச அங்கிகாரம் கொண்ட பதவியொன்று இலங்கைக்கு கிடைப்பது பெரும் பாக்கியம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க மேலும் கூறியுள்ளார்.
He is an American puppet. If he gets this job it will strengthen his pro Israel and anti Palestine stand further.
ReplyDeleteஉள்நாட்டில் expired ஆன சாமானை வௌிநாட்டில் எப்படி சந்தைப்படுத்த முடியும்.
ReplyDeleteHe is going to spoil the UN as he did Sri Lanka. if you go, Sajid also will come there.
ReplyDelete