றிசாத்துக்கு எதிரான, நம்பிக்கையில்லா பிரேரணை ரத்தானாது
உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீனுக்கு எதிராக பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்ற அமர்வு முடிவுக்குக் கொண்டு வந்ததையடுத்து இரத்தாகியுள்ளது.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்பு அச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சிலரை விடுவிப்பதற்கு இராணுவ தளபதிக்கு அழுத்தம் பிரயோகித்தமை, சினமன் கிரேன்ட் ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய குண்டுதாரி இன்சாப் அஹமட் இப்ராஹீம் என்பவருக்குச் சொந்தமான தொழிற்சாலைக்கு கைத்தொழில் அமைச்சின் மூலம் வெற்றுத் தோட்டாக்கள் விநியோகித்தமை உட்பட பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரால் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டிருந்தது. அத்தோடு நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலிலும் சேர்க்கப்பட்டிருந்தது.
பாராளுமன்ற அமர்வு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலும் ரத்தாகியுள்ளது. அதனால் அந்த நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்ட முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையும் அகற்றப்பட்டுள்ளதென பாராளுமன்ற அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இதேவேளை பாராளுமன்றம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதும் தேவையேற்படின் அந்த நம்பிக்கையில்லா பிரேரணையை மீண்டும் முன்வைக்க முடியும் எனவும் அவர் கூறினார்.
அத்தோடு பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கடந்த 51 நாட்கள் அரசாங்கத்தில் கடமையாற்றிய அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர்தல் உட்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளல் தொடர்பான 6 பிரேரணைகளும் பாராளுமன்ற அமர்வு முடிவுக்கு வந்ததையடுத்து இரத்தாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.-Vidivelli
ஏ.ஆர்.ஏ.பரீல்
He must be investigated and punished
ReplyDeleteProper investigation had been carried out by the parliamentary sub committee and the CID and he was acquitted from all the allegations.
ReplyDelete@Jong Ayya, Ranil Government's investigations were fake, and an eye wash to protect the ministers.
ReplyDeleteTherefore it cannot be acceptable.
Gota Govt needs to reinvestigate him again and punish
Ajan,
ReplyDeleteAll the Judges from Chief Justice downwards are already started obeying orders from Gota’s government. You are talking about fake investigation from previous government.