உலகில் அதிக செலவில் தேர்தல் நடத்தப்படும், நாடாக இலங்கை மாறுமா..?
பொதுத் தேர்தலையும் நீண்ட நாட்களாக நடத்தப்படாமல் இருக்கும் மாகாணசபை தேர்தலையும் ஒருங்கே நடத்த முடியுமா என்பது குறித்து ஆராயப்படுவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இரண்டு தேர்தல்களையும் ஒருங்கே நடத்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும் இறுதி தீமானம் எதுவும் இன்னும் எடுக்கப்படவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் இரண்டு தேர்தல்களையும் ஒருங்கே நடத்தும் போது பிரசாரங்கள், வாக்கு எண்ணும் முறைகள் என்பவற்றை நடைமுறைப்படுத்துவதில் சிரமங்கள் ஏற்படும் ஏதுக்கள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது நடத்தப்பட்டால் உலகில் அதிக செலவில் நடத்தப்படும் தேர்தலாக அது அமையும். இருப்பினும் வாக்காளர்கள் இரண்டு தேர்தல்களிலும் ஒரேநாளில் வாக்களித்து முடித்துவிடும் சந்தர்ப்பம் ஏற்படும் என்றும் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment