வத்தளை தொகுதியை, பிடிக்க கடும் போட்டி
முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்க அரசியலில் இருந்து விலக, தீர்மானித்துள்ள நிலையில், அவரது விலகலை அடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் வத்தளை தொகுதி அமைப்பாளர் பதவிக்கு வெற்றிடம் ஏற்படவுள்ளது.
இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் வத்தளை தொகுதி அமைப்பாளர் பதவியை பெறுவது முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் இலங்கை வங்கியின் முன்னாள் தலைவர் ரொனால்ட் பெரேரா ஆகியோருக்கு இடையில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
வத்தளை தொகுதி அமைப்பாளர் பதவியை ஜோன் அமரதுங்கவின் மருமகன் தினேஷ் வீரக்கொடிக்கு வழங்க வேண்டும் என முன்னர் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.
எனினும் தனக்கு தற்போதே செயற்பாட்டு ரீதியான அரசியலில் ஈடுபடும் நோக்கம் இல்லை என தினேஷ் வீரக்கொடி கூறியதுடன் குறித்த யோசனையை நிராகரித்துள்ளார்.
Post a Comment