Header Ads



சர்வதேச மட்ட சதுரங்க போட்டியில், கிழக்கு மாகாண வீரர் பமிஹாத் சம்பியனாக தெரிவு

11வது எத்துகல்புர சர்வதேச சதுரங்க போட்டி அன்மையில்  குருநாகல் புளூ ஸ்கை ஹோட்டலில் இடம்பெற்றது,

சர்வதேச ரீதியில் ஆயிரக்கணக்கான வீரர்களுக்குள் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பமிஹாத் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டார்.

நவம்பர் 30 முதல் டிசம்பர் 4 வரை இடம்பெற்ற இப் போட்டித் தொடரில் வெளிநாட்டு வீரர்கள் உட்பட இலங்கையை சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள் பங்குபற்றினர். இதில் 450 வீரர்கள் பங்குபற்றிய Unrated பிரிவில் முதல் இடத்தை பெற்று சம்பியனாக இவர் தெரிவு செய்யப்பட்டார்.

இவர் அன்மையில் இடம்பெற்ற பாடசாலைகளுக்கிடயிலான தேசிய மட்ட போட்டியில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டதுடன் கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையின் பழைய மாணவரும், ஸஹிறியன் நைட்ஸ் சதுரங்க கழக உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(ஏ.எம்.றொஸான்)

1 comment:

  1. Congratulations
    I wish you to continue your practice and win for our country.

    ReplyDelete

Powered by Blogger.