Header Ads



போரிஸ் ஜோன்சனுக்கு ஜனாதிபதியும், பிரதமரும் வாழ்த்து


பிரித்தானிய பொதுத்தேர்தலில் வெற்றிபெற்றுள்ள போரிஸ்ஜோன்சனுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பொதுத் தேர்தல்களில் மகத்தான வெற்றியைப் பெற்றதற்கு போரிஸ்ஜோன்சனுக்கும் கொன்சவேர்ட்டிவ் கட்சிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் வெற்றியானது தேசிய கொள்கை சார்பு அரசாங்கங்களின் தற்போதைய உலகளாவிய போக்கை பிரதிபலிக்கின்றது. புதிய பிரதமருக்கும், அரசாங்கத்திற்கும் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் மக்களுக்கும் எனது வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 2019 பிரித்தானிய பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் போரிஸ்ஜோன்சனுக்கும் கொன்சவேர்ட்டிவ் கட்சிக்கும்  வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது தீர்க்கமான தலைமைத்துவம் இந்த வெற்றிக்கு வழிவகுத்தது என்பதில் சந்தேகமில்லை. பிரதமராக பதவி வகிக்கும் காலத்திற்கு எனது வாழ்த்துகள் “ என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.