ரணிலுக்கு மீண்டும் ஒரு கிழமை அவகாசம், வழங்கியுள்ள ஐதேக எம்.பி.க்கள்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க விரைவாக எதிர்க் கட்சித் தலைவர் பதவியை சஜித் பிரேமதாசவிற்கு வழங்க வேண்டும் என அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டாரவின் கொழும்பில் அமைந்துள்ள இல்லத்தில் நேற்று கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சுஜிவ சேனசிங்க எதிர்க் கட்சித் தலைவர் பதவி தொடர்பில் தீர்மானம் ஒன்றிற்கு வந்துள்ளதாக கூறினார்.
இங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் துஸார இந்துனில் எதிர்வரும் வியாழக்கிழமை ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் கட்சி குழு கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும் அவற்றில் சஜித் பிரேமதாச தொடர்பில் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு நிறைவேற்றப்படும் என ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார்.
இதேவேளை எதிர்க் கட்சித் தலைவர் பதவி சஜித் பிரேமதாசவிற்கு, ரணில் விக்ரமசிங்கவால் வழங்கப்படும் என நம்புவதாக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெரும தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண பாராளுமன்றம் கூட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களின் பிரச்சினைகளை பேசுவதற்கான சிறந்த இடம் பாராளுமன்றம் எனவும் அதனை பிற்போடுவதால் நாட்டின் பிரச்சினைகளில் இருந்து விலகி செல்ல முற்படுவது புலப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை எதிர்க் கட்சித் தலைவர் பதவி தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இன்று பல்வேறு சந்தர்பங்களில் கருத்து தெரிவித்தனர்.
அதற்கமைய கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பீ.பெரேரா தான் அறிந்ததற்கு அமைய ரணில் விக்ரமசிங்க தனது பதவியை இராஜினாமா செய்வுள்ளதாகவும் அதற்கு அவருக்குவாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் கூறினார்.
இங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஸ டி சில்வா கட்சிக்கு சிறந்த ஆலோசகர் ஒருவர் தேவைப்படுவதாக தெரிவித்தார்.
இங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ கட்சிக்குள் இரண்டு குழுக்கள் இல்லை என கூறினார்.
தான் தற்போதும் ஐக்கிய தேசியக் கட்சியை என்ற அணியை சேர்ந்தவன் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை இங்கு கருத்து தெரிவித்த நளின் பண்டார கட்சி புத்துயிர் பெறுவதற்கு தான் உள்ளிட்டவர்கள் பொறுத்தமற்றவர்கள் எனின் தாங்களை விலக்கிவிட்டு கட்சி முக்னோக்கி பயணிக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு என தெரிவித்தார்.
அவருக்கு இந்த வாரத்தை மாத்திரம் வழங்குவதாக தெரிவித்த அவர் கட்சியில் இருந்து விலக ரணில் விக்ரமசிங்க தீர்மானிக்க வேண்டும் எனவும் கூறினார்.
இதன் பின்னணியில் ராஜபக்ஷாக்கள் இருப்பதாகவும் குற்றம் சுமத்தினார்.
கேள்வி : சிறிகொத்தாவில் நடைபெறும் ஊடக சந்திப்பில் கலந்துக்கொள்ளுமாறு உங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையா?
ஹரின் பெர்ணான்டோ : கட்சிக்குள் சிறு சிறு முரண்பாடுகள் எப்போதும் காணப்பட்டன. அந்த வகையில் தற்போதைய முரண்பாட்டு நிலைமைக்கும் விரைவில் தீர்வு அவசியம்.
இவனை தூக்கி வெளியே போட முடியாத unp காரங்கள்.
ReplyDeleteஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வளங்கிய ஒருவாரகால அவகாசத்தை மகிந்த சகள்கோதர்கள் பாராளுமன்றத்தி ஏறக்குறைய ஐந்து வாரங்கள் பின்போட்டதன்மூலம் செல்லாக்காசாக்கியுள்ளனர். சஜிதுக்கு மட்டுமல்ல தேர்தல்காலத்தில் ஐதேக கட்ச்சியின் தலைமை விடயத்தில் தலையிட்ட சிறுபாண்மை இனக் கட்ச்சிகளுக்கும் “செக்” வைக்க நரி ரணிலுக்கு இது போதிய அவகாசமாகும் என்றே தோன்றுகிறது. தேர்தலில் ஐதேகவுடன் கூட்டமைப்பு வைக்கும் சிறுபாண்மை இனக்கட்சிகள் தனிமைபடுகிற சூழல் உருவாகிவருகிற்து. ஆசியாவின் நரியின் மருமகனான ரணில் இலங்கையின் நரி என்கிற தன் பெயரைக் காப்பாற்றுவார் என்றே தோன்றுகிறது.
ReplyDelete