Header Ads



சபாநாயகர் உடனடியாக, பதவி விலக வேண்டும் - ஜோன்ஸ்டன்

கடந்த தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு ஜனநாயகமான முறையில் தலைவணங்கி, சபாநாயகர் உடனடியாக தனது பதவியில் இருந்து விலக வேண்டும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையை பார்வையிட சென்றிருந்த போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

நாங்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் கரு ஜயசூரிய ஜனநாயகத்தை மதிக்கும் தலைவர் என்ற வகையிலேயே பிரபலமானவர்.

தற்போதைய அரசாங்கத்திற்கு தடையின்றி வேலை செய்ய இடமளித்து விட்டு செல்லுமாறு மக்கள் இரண்டு தேர்தல் வெற்றிகள் மூலம் தெரிவித்துள்ளனர்.

இதனால், மக்களின் பணிகளுக்கு தடையாக இருக்காமல், நாடாளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல இடமளித்து சபாநாயகர் ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. பாராளுமன்றத்தில் தனது உச்ச கட்ட ஐஆர்ஸீ நடத்தையை வௌிக்காட்டி நாட்டையும் நாட்டு மக்களையும உலக அரங்கில் அவமானப்படுத்தி நாட்டின் தரத்தையும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் படுமோசமாக அழித்து ஒழித்த இந்த நபர் களவாடுவதற்கு மிகவும் பொறுத்தமான அமைச்சுக்கு பொறுப்பாக இருக்கும் ​போது இந்த நாடு எங்கே போய்க் கொண்டிருக்கின்றது என பொதுமக்கள் கேட்கின்றார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.