என்னுடைய அடுத்த இலக்கு இலங்கைதான் - நித்தியானந்தா
தலைமறைவான நித்தியானந்தா வெளியிட்டுள்ள புதிய வீடியோவில், ராவணனை கடுமையாக சாடியும், ராமரை புகழ்ந்தும் பேசியுள்ளார்.
அதில், சமூகத்துக்கு பங்களிப்பது தான் ராமரின் கொள்கை, ராமர் கோவில் கட்ட யார் நிதி வழங்கினாலும் அது இந்திய பொருளாதாரத்திற்கு பங்களிப்பது போன்றதாகும்.
ராமருக்கு கோவில் கட்டுவதால் இந்திய பொருளாதாரம் ஏற்றம் காணும், நான் எந்த அமைப்பிலும் இல்லை, அரசியலும் பேசவில்லை.
எனது சீடர்கள் தங்களால் முயன்ற உதவியை வழங்குங்கள், என்னுடன் லட்சுமி இருக்கிறார், என்னால் இயன்ற அளவு நானும் பங்களிப்பேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் என்னுடைய அடுத்த இலக்கு இலங்கையில் உள்ள நல்லை திருநாஞ சம்பந்தர் ஆதினம் தான்.
ராவணன் நேரடியாக கைலாசத்தை தொட்டு தூக்க முயன்றான். கைலாசத்தில் உள்ள சிந்தாமணி மண்டபம் தான் கைலாசத்தின் அருள் பொலிவுக்கு காரணம் என நினைத்தான்.
இதுபற்றி சிவனிடம் கேட்க அவரும் எடுத்துக்கொள் என கூறிவிட, முட்டாள் ராவணன் சிந்தாமணியை எடுத்து இலங்கையில் வைத்தான் என தெரிவித்துள்ளார்.
This bad liar, the mother is the father, he has Born without knowledge.?
ReplyDeleteThis bad liar, the mother is the father, he has Born without knowledge.?
ReplyDelete