Header Ads



கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா, தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்


- ஏ.எச்.ஏ. ஹுஸைன் -

கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அனுராதா யஹம்பத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண அலுவலகத்தில் அவர் வியாழக்கிழமை 142.12.20149 காலை தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

கடந்த 4ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட நிலையிலே, அவர் இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக கடமைகளை பெறுப்பேற்றுக் கொண்டார்.

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் ஆரியவதி கலப்பதி, திணைக்கள தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 கிழக்கின் புதிய ஆளுநர் அனுராதா ஆடை வடிவமைப்பாளரும் ஏற்றுமதித் துறையின் பிரபல தொழிலதிபருமாவார்.

இங்கிலாந்தின் லீட்ஸ் டுநநனள பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்ற இவர் தனது பட்டப் படிப்பினை பூர்த்தி செய்ததன் பின் தனது தாயார் சீதா யகம்பத்திற்கு சொந்தமான கண்டிக்ஸ் நிறுவனத்தில் இணைந்து பணியாற்றினார்.

2018ஆம் ஆண்டில் இவர் ஏற்றுமதித் துறைக்கு வழங்கிய முக்கிய பங்களிப்புக் காரணமாக இலங்கை அபிவிருத்திச் சபையினால்; பாராட்டப்பட்டதுடன், மிகச் சிறந்த புத்தாக்க ஏற்றுமதியாளர் எனும் சிறப்பு விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. Wishing a bright future to the Easter

    ReplyDelete
  2. Wishing a bright future to the region with the appointment of the new governor with a brilliant family & educational background.

    ReplyDelete
  3. Shingalas or Muslims governor's are welcome in eastern Provence..?

    ReplyDelete

Powered by Blogger.