பாராளுமன்றத்தில் 3/2 பெரும்பான்மை பெற அதிரடித்திட்டம் - ஜனவரி 31 க்கு முன் நிறைவேற்ற உத்தரவு
நாட்டிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் 20இலட்சம் ரூபா வீதமும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 20மில்லியன் ரூபா வீதமும் அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிதி ஒதுக்கியுள்ளார்.
இவ் அபிவிருத்தி பணிகளை எதிர்வரும் ஜனவரி 31ஆம் திகதிக்கு முன்னர் நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் பணிப்புரை பிறப்பித்தார்.
மேலும் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் 700வேலைவாய்ப்புக்களை வழங்கவும், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுக்கு 100வேலைவாய்ப்புக்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பொன்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. இச் சந்திப்பில் அரசாங்கத்தின் அனைத்துப் பங்காளிக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது பாராளுமன்றக் கூட்டத் தொடர், தேசிய பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. இதன்போதே ஜனாதிபதி மேற்படி விடயங்களை குறிப்பிட்டார்.
இங்கு கலந்துரையாடலில் ஜனாதிபதி மேலும் கூறுகையில்,
பாராளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளும் நோக்குடன்
அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். வற் வரி, தேசத்தை கட்டியெழுப்பும் வரி உட்பட அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள வரிச் சலுகைகள் பொது மக்களுக்குச் சென்றடைந்துள்ளதா என்பதை கண்டறிய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு குறிப்பிட்டார். இதேவேளை இச் சந்திப்பு தொடர்பாக தினகரனுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சந்திம வீரக்கொடி, மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பல தீர்மானங்களை எடுத்துள்ளார். வறுமையில் வாழும் மக்களை நோக்காகக் கொண்டு அவரது அபிவிருத்தித் திட்டங்கள் அமைந்துள்ளன. நாட்டு மக்கள் எதிர்பார்த்திருந்த யுகமே உருவாகியுள்ளது என்றார்.
சுப்பிரமணியம் நிஷாந்தன்
HOPE The TEX will remain the same after general election too.
ReplyDeletecurrent general election system is favour to Muslims only, which is undemocratic.'
ReplyDeletePlease change it completely like Indian system
2/3
ReplyDeleteஅஜன், இப்போதாவது உமக்கு விளங்குகின்றதா? முஸ்லிம்களுடன் சிங்களவர்களும் இணைந்து வாக்களிப்பார்கள். அதனால் அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் தெரிவு செய்யப்படுகின்றனர்.
ReplyDeleteபாசிச சிந்தனை கொண்ட புலித் தமிழனை யாரும் நம்புவதற்கில்லை.
இந்தியாவே உங்களை புறக்கணித்து ஒதுக்கி வைத்திருப்பதை அண்மையில் கொண்டு வந்த குடியுரிமை சட்டமூலம் மீண்டும் நிரூபித்துள்ளதை நீர் அறியவில்லையா? அந்நாட்டு தலைவனையே கொன்று குவித்த பாவிகளடா நீங்கள்.
உனது தலைவனின் மூளை சிதறிய போது உமது மூளையும் கலங்கிவிட்டது போலும்!