தனது பொறுப்புக்களை நிறைவுசெய்து, பதவிவிலக ரணில் தயாராகவுள்ளார்
ரணில் விக்கிரமசிங்க மிகவும் கௌரவமான முறையில் புதிய தலைமுறைக்கு தமது பொறுப்புக்களை ஒப்படைத்து அவரின் ஜனநாயக கடமையை நிறைவு செய்வார் என எதிர்ப்பார்ப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பீ.பெரேரா தெரிவித்துள்ளார்.
இன்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
எமக்கு கிடைத்துள்ள தகவலின் படி ரணில் விக்கிரமசிங்க தனது பொறுப்புக்களை நிறைவு செய்து பதவி விலக தயாராக உள்ளதாக அறியக்கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
Post a Comment