மங்கள, ராஜித்த, ரஞ்சனுக்கு வேட்புமனு வழங்காதீர்கள் - இளம் பிக்குகள் கோரிக்கை
பெளத்த பிக்குகளை அவமதித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனுக்களை வழங்க வேண்டாமென திரி நிக்காயக என்ற இளம் பெளத்த பிக்குகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் மனுவொன்றை அந்த சங்கம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மனுவில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மங்கள சமரவீர, ராஜித சேனாரத்ன மற்றும் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோருக்கே வேட்பு மனுக்களை வழங்க வேண்டாமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
Intha kawiyarhalin karutthai theliw padutha intha naattil yyarumilliya???
ReplyDelete