இலங்கையில் அமைக்கப்படும், மிக உயரமான கட்டிடம்
இலங்கையில் மிக உயரமான கட்டிடமாக அமைக்கப்படும், வணிக மற்றும் குடியிருப்பு கோபுரம் அடுத்த ஆண்டு தொடங்கி மூன்று ஆண்டுகளில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The One Transworks Square இன் தலைவர் ஜானகி சிறிவர்தன இதனை தெரிவித்துள்ளார். இந்த கட்டிடம் தென்னாசியாவில் ஆறாவது உயரமான கட்டிடமாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், “இந்த கட்டிடமானது இரண்டு கோபுரங்களை கொண்டிருக்கும். இதன் முதலாவது கோபுரம் 326 மீற்றர் உயரத்தில் 82 தளங்களை கொண்டதாக அமைக்கப்படும்.
தற்போது 42 தளங்களை எட்டியுள்ளதுடன், 20 வீதமான பணிகள் முடிவடைந்துள்ளன. 2021ம் ஆண்டு டிசம்பர் இந்த கோபுரம் திறக்கப்படும்.
இரண்மாவது கோபுரம் 310 மீற்றர் உயரத்தில் 77 தளங்களை கொண்டதாக அமைக்கப்படவுள்ளது. இரண்டாவது கோபுரத்திற்கான 5 வீதமான பணிகள் நிறைவடைந்துள்ளன.
560 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்பட்டவுள்ள இந்த திட்டத்திற்கு தற்போது வரை 180 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவுசெய்யப்பட்டுள்ளதாக” என கூறியுள்ளார்.
Post a Comment