Header Ads



இஸ்லாத்தின் பெயரில் நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் போன்று இடம்பெற இராணுவம் இடமளிக்கக்கூடாது


இலங்கை இராணுவம் பொதுமக்களின் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்கின்றது என சர்வதேச புலம்பெயர் அமைப்புகளும் இலங்கையில் சிலரும் முன்வைக்கும் காரணிகள் உண்மைக்கு புறம்பான முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டிய கருத்தாகும்.

அத்துடன் கடந்த ஆட்சிக் காலத்தில் இராணுவ அதிகாரிகளை சிறையில் அடைக்கப்பட்ட காரணிகள் கண்டிக்கத்தக்க காரணிகள் என்கிறார் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன. இஸ்லாமிய மதத்தின் பெயரில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் போன்றதொரு சம்பவம் இடம்பெற இராணுவம் இடமளிக்கக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தினர். 

ஶ்ரீ ஜயவர்தனபுரத்தில் அமைந்துள்ள இராணுவ தலைமையத்திற்கு பாதுகாப்பு செயலாளரான ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன  உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்டார். 

இராணுவ தலைமையகத்திற்கு வருகை தந்த பாதுகாப்பு செயலாளர் தலைமையகத்திலுள்ள சிரேஷ்ட அதிகாரிகளுக்கு உரையினை நிகழ்த்திய வேளையில் இதனைக் கூறியிருந்தார். அவர் மேலும் அங்கு கூறிய விடயங்களானது. 

இராணுவ சேவையானது தாய் நாட்டிற்கு சேவையாற்றும் பாரிய கடமையாகும். உலகில் உன்னதமான தொழிலாக இராணுவ சேவையுள்ளமையால் எப்போதும் அதை பெருமையுடனும், மரியாதையுடனும் பார்க்கவேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது,  அதை எந்த சந்தர்ப்பத்திலும் வீழ்ச்சியடைய விடக்கூடாது.

இலங்கை இராணுவமானது கடந்த காலங்களில்  நாட்டிற்கு பாரியசேவையை ஆற்றியுள்ளது. இதற்காக முழு நாடும் இராணுவத்திற்கு கடன்பட்டிருக்கிறது,  இந்த பெருமைமிக்க அமைப்பில் நீங்களும் அங்கத்தவர்களாய் இருப்பதை முன்னிட்டு நீங்கள் பெருமையடையுங்கள்.

அத்துடன் உங்களை சரியான தலைமைத்துவ படுத்தி முன்னோக்கி செல்வதற்கான இராணுவ தளபதி தற்போது உங்களுடன் உள்ளார். இராணுவ மனிதர்களாகிய எமது தரத்திற்கு ஏற்ப நாம் வாழ வேண்டும்.   

விடுதலைப்புலிகள் பயங்கரவாத்தை தோற்கடித்து எமது நாட்டில் சமாதான சூழ்நிலையை நிலை நாட்டிய இராணுவத்தை கௌரவமாக எமது நாட்டில் மதிக்கின்றார்கள்.

அதன் பிரகாரம் வெளிநாடுகளில் உள்ள இராணுவ தலைமையகத்தை போன்று இன்று எமது இராணுவ தலைமையகமானது ஶ்ரீ ஜயவர்தனபுர பூமியில்  ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டுள்ளன. இருந்த போது எமது இராணுவ வீரர்கள் கடந்த காலங்களில் சிறைகளுக்குள் அடைக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டனர். இப்படியான சம்பவங்கள் வேதனைக்குரிய விடயமாக அமைகின்றது என அவர் தெரிவிதத்தார்.

1 comment:

  1. I'm Saiute my country war Heroes and our Brilliant and intelligent Army.

    ReplyDelete

Powered by Blogger.