ராஜபக்ஷவினரின் கோட்டைக்கு திடீர், விஜயம்செய்த ஜனாதிபதி கோத்தாபய
ஹம்பாந்தோட்டை நகர சபைக்கு சொந்தமான கூட்டு உரத் தயாரிப்பு வளாகத்தில் உள்ள தேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ திட்டத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இன்று (15) பார்வையிட்டார்.
ஹம்பாந்தோட்டை நகரின் குப்பை பிரச்சினைக்கு தீர்வாக நாளொன்றுக்கு 50 தொன் திண்மக் கழிவுகளை கூட்டு உரமாக மாற்றக்கூடிய இந்த திட்டம் ஜயிக்கா நிதியுதவியின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
திட்டப் பணிகளை பார்வையிட்ட ஜனாதிபதி, இந்த நிர்மாணப் பணிகளை விரைவாக நிறைவு செய்து ஒரு மாதத்திற்குள் அதன் செயற்பணிகளை ஆரம்பிக்குமாறு அதிகாரிகளுக்கும் ஒப்பந்த நிறுவனங்களுக்கும் பணிப்புரை விடுத்தார்.
ஜனாதிபதியின் இந்த திடீர் கண்காணிப்பு விஜயத்தில் ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, டி.வி.சானக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.
Post a Comment