அமெரிக்கா, இந்தியா, இலங்கையிலும் தேசியவாத கொள்கைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டமை தேர்தல் முடிவுகள் மூலம் அம்பலமாகியுள்ளது
உலகம் முழுவதிலும் தேசியவாத கொள்கைகள் மேலோங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் கொன்சர்வேட்டிவ் கட்சி வெற்றியீட்டியுள்ளதன் ஊடாக தேசியவாத கொள்கைகளின் இடையறாதன்மை வெளிப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேற வேண்டும் என்ற அந்நாட்டு பழமைவாத கொள்கைகளை பின்பற்றும் கொன்சர்வேட்டிவ் கட்சி தேர்தலில் அமோக வெற்றியை பதிவு செய்துள்ளது.
இதன் ஊடாக லிபரல் கொள்கைகளை பின்தள்ளி தேசியவாத அடிப்படையிலான கொன்சர்வேட்டிவ் கொள்கைகள் மேலோங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, இந்தியா, இலங்கையிலும் இதே தேசியவாத கொள்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டமை தேர்தல் முடிவுகள் மூலம் அம்பலமாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment