Header Ads



மட்டக்களப்பு வைத்தியசாலையில், படுகொலை செய்யப்பட்ட மாணவி

 மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்று நோய் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த  காங்கேயனோடை 14 வயது மாணவியொருவருக்கு அதிக மருந்தை வழங்கியதால் மாணவி நேற்று உயிரிழந்த (இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.) சம்பவம் தொடர்பாக சுகாதார அமைச்சுக்கு அறிவித்ததுடன் விசாரணை இடம்பெற்றுவருவதாக போதனா வைத்தியசாலை பணிப்பாளர் காலாறஞ்சினி கணேசலிங்கம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காங்கேயனோடை பிரதேசத்தைச் சேர்ந்த உவைஸ் பாத்திமா ஜப்றா(வயது 14) எனும் மாணவியே இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.

காங்கேயனோடை அல் அக்ஸா மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவியான குறித்த மாணவி கடந்த வருடம் திடீரென புற்று நோயினால் பாதிக்கப்பட்ட போது மகளை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று புற்று நோய் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தோம்.

சிகிச்சையின் பலனாக மகள் தேறி வந்த நிலையில் மாதாந்தம் கிளிணிக் சென்று வந்தோம் இந்த  நிலையில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமையும் (3.12.2019) கிளிணிக் சென்றபோது மகள் ஜப்றாவுக்கு மருந்து வழங்கப்பட்டது

2 மில்லி மருந்தே தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது ஆனால் அன்றைய தினம் வைத்தியர் 20 மில்லி மருந்தை வழங்குமாறு வைத்திய அறிக்கையில் எழுதியுள்ளார்.

2 மில்லி மருந்து வழங்குவதற்கு பதிலாக 20 மில்லி மருந்தை வழங்கி விட்டார்கள். பின்னர் மயக்க மடைந்த மகளை அன்றைய தினம் இரவேடு இரவாக கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அங்கும் சிகிச்சை பலனளிக்காததால் மீண்டும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கடந்த சனிக்கிழமை (07) கொண்டு சென்று அங்கு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சேற்று (09.12.2019) திங்கட்கிழமை மாலை உயிரிழந்தார்.

இது வைத்தியர் விட்ட பிழையினாலேயே எங்களது மகளுக்கு இந்த கதி நடந்துள்ளது. இன்று நாங்கள் ஒரு பிள்ளையை இழந்து நிற்கின்றோம். எங்களுக்கு நடந்த இவ்வாறான சம்பவம் இன்னுமொரு பிள்ளைக்கு நடக்க கூடாது. குறித்த சிறுமியின் பெற்றோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர். அத்தோடு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டனர். 

இந்த சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு போதான வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் கேட்ட போது,

இந்த சிறுமி எமது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 3 ம் திகதி புற்று நோய்கு மருந்து ஏற்றப்பட்ட போது இடம்பெற்ற தவறு காரணமாக பக்கவிளைவுகள் ஏற்பட்டு  அதற்குரிய சிகிச்சை பலனின்றி நேற்று 9 ம் திகதி மாலை உயிரிழந்துள்ளார். 
இது தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு அறிவித்துள்ளதுடன் நிகழ்ந்த தவறு தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணை இடம்பெற்று வருகின்றது அதேவேளை தவறுகள் இடம்பெறும் பட்சத்தில் உரிய விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றது இருந்த போதும் எதிர்வரும் காலங்களிலும் இவ்வாஙான தவறுகள் இடம்பெறும் பட்நசத்தில் எனக்கு தெரியப்படுத்தும் பட்சத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் 

இதேவேளை கடந்;த மாச் மாதத்தில் சிறுவன் ஒருவருக்கும் இரத்தம் மாற்றி ஏற்றப்பட்டு உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றதுடன் பாதிக்கப்பட்ட பெற்றோர் நீதிமன்றத்தை நாடிய நிலையில் வழக்கு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

6 comments:

  1. அந்த பிள்ளையே அந்த தாதியிடம் ஏன் அதிகமாக மருந்து தருகிரீர்கல் என கேட்டும்,அந்த தாதி வலுக்கட்டாயமாக மருந்து கொடுத்து கொலை செய்திருக்கிரால்.தாதி மட்டுமல்ல இன்னும் இதற்கு பின்னால் வைத்துயசாலை உள்ள சிலரும் இருக்கலாம்.இது ஒரு திட்டமிட்ட கொலை.இதற்கு எதிராக மிகப் பெரும் நடவடிக்கையை அரசும்,சுகாதார அமைச்சும்,சட்டம்,பொலிசார் எடுக்க வேண்டும்.இந்த கொலை செய்த அனைவரையும் சட்டத்துக்கு முன் நிறுத்தி மரண தண்டனை அளிக்க வேண்டும்.அந்த பிள்ளையின் குடும்பத்துக்கு உதவிகளும் மற்றும் சட்ட நடவடிக்கைக்கு தேவையான அனைத்து வசதிகலையும் செய்ய ஒரு நிதி திரட்ட ஜப்னா முஸ்லிம் ஒரு ஆக்கம் மற்றும் வங்கி கணக்கினை பிரசுரியுங்கல்

    ReplyDelete
  2. தமிழ் பயங்கரவாதிகளால் திட்டமிட்டு வேண்டுமென்றே கொலை செய்யப்பட்டிருக்கின்றாள்

    ReplyDelete
  3. Batticaloa cancer hospital has lots of similar cases and murders because of the negligence and abuse of of middle level doctors and nurses. when any patient or their relatives ask the details of their conditions or treatments these doctors and nurse always bark like dogs at them and say they don't give any details.. this is from my personal experience too.

    ReplyDelete
  4. தவறுசெய்யதா ஷாபி டாக்டர்அவர்களுக்கு பேசிய சொங்கி ரத்தன தேரர் எங்க இதுவெல்லாம் பேசா மாட்டார்

    ReplyDelete
  5. தவறுசெய்யதா ஷாபி டாக்டர்அவர்களுக்கு பேசிய சொங்கி ரத்தன தேரர் எங்க இதுவெல்லாம் பேசா மாட்டார்

    ReplyDelete
  6. I have experience staying with a cancer patient in Batticaloa hospital. It is death trap. I do not think anybody saved their life. Most of the patients admitted to this ward died. There is horrible in the ward. Patients are not treated well. There will be no doctors in the ward. Doctors in on call will attend the hospital in the morning just before the consultant ward round. Nurses and others are flirting each other. They do not care the patients. I wanted to write about this for long, but could not due to heavy work. Please avoid Batticaloa hospital to a great extent which is worse place for patients. Dr. Jazeel

    ReplyDelete

Powered by Blogger.