தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதிகளை, துரிதகரமாக நிறைவேற்ற வேண்டுமென ஜனாதிபதி உறுதி
பொதுத்தேர்தலின் வெற்றியை கருத்திற் கொண்டு இடைக்கால அரசாங்கம் தற்போது செயற்படவில்லை. தேர்தல் கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் பல பொதுத்தேர்தலுக்கு முன்னர் செயற்படுத்தப்படும்என பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்தார்.
மக்களின் வாழ்க்கை தரம் இன்று உயர்வடைந்துள்ளதுடன் நாளாந்த செலவுகளும் அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றது.
இதற்கு பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. இறக்குமதி செய்யப்படும் உற்பத்திகளுக்கு இன்று பாரிய கேள்வி நிலவுகின்ற பட்சத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள பொருட்களின் விலையும் அதிகரித்த மட்டத்தில் காணப்படுகின்றது.
வாழ்க்கை செலவுகள் குறித்து ஆராயும் குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய வழங்கப்பட்ட பொருள் விலைக்குறைப்பிற்கு அமைய தற்போது பல்வேறு அத்தியாவசிய பொருட்பகளின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
அரிசி உற்பட தேர்ந்தெடுக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையினை குறைக்க அமைச்சரவை அங்கிகாரம் கிடைக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் தொடக்கம் விலைக்குறைப்பு அமுல்படுத்தப்படும்.
ஜனாதிபதி தேர்தலின் வெற்றியினை தொடர்ந்து பொதுத்தேர்தலின் வெற்றியினை இலக்காக் கொண்டு பொருட்களின் விலை குறைக்கபடவில்லை.
தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் அடிமட்டத்தில் இருந்து துரிதகரமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ உறுதியாக உள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் முழுமையாக நிறைவேற்றப்படும். இடைக்கால அரசாங்கத்தில் மக்களுக்கு பயன்பெறும் பல விடயங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலன் மக்களுக்கு ஜனவரி மாதம் தொடக்கம் முழுமையாக கிடைக்கப் பெறும் என்றார்.
Post a Comment