மைத்திரிபால பயன்படுத்தும் சொகுசு, மாளிகையை இழந்துவிடும் பரிதாபம்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயன்படுத்தும் சொகுசு மாளிகை அவருக்கு இல்லாமல் போகும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பு 07, பெஜட் வீதியில் இந்த உத்தியோகபூர்வ இல்லம் அமைந்துள்ளது. மைத்திரி, ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதி ஒருவர் பயன்படுத்துவதற்காக மாத்திரம் இந்த இல்லம் திருத்தியமைக்கப்பட்டது.
அதற்காக அரச உத்தியோகபூர்வ வீட்டு தொகுதிகள் மூன்றை ஒன்றாக இணைத்து அதிசொகுசு மாளிகையாக நிர்மாணிக்கப்பட்டது. இதற்காக மக்களின் வரிப்பணத்தில் பல கோடி ரூபா செலவிடப்பட்டது.
ஓய்வு பெற்ற ஜனாதிபதிகள், உத்தியோகபூர்வ வீடுகளுக்கு உரிமை கோர முடியும். இதனால் மைத்திரி தனது பதவிக்காலம் நிறைவடைந்த பின்னர் இந்த மாளிகையை தனது பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ள அனுமதி கோாரினார். அதற்கான அமைச்சரவை அனுமதியையும் அவர் பெற்றுக் கொண்டார்.
எனினும் இதுவரையில் அவர் அந்த அமைச்சரவை அனுமதியை உரிய முறையில் பெறவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அந்த அனுமதி இரத்தாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
பல கோடி செலவிடப்பட்ட அந்த மாளிகையை ஓய்வு பெற்ற ஜனாதிபதி ஒருவருக்கு உத்தியோகபூர்வ வீடாக வழங்குவதற்கு பதிலாக வேறு பொருத்தமான பயன்பாட்டிற்கு பயன்படுத்த அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
Good!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ReplyDelete