Header Ads



"கோட்டாபயவின் வெற்றிக்கு ரணில், மீது இருந்து வெறுப்பே காரணம்"


கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கோட்டாபய ராஜபக்சவின் வெற்றிக்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை மீது இருந்து வெறுப்பே காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை மீதான வெறுப்பின் காரணமாகவே பொது மக்கள், பொதுஜன பெரமுனவை தெரிவு செய்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு நேற்று -30.- வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“கடந்த அரசாங்கத்தில் நிதிக்குற்றப்புலனாய்வு திணைக்களத்தை நிறுவி எவருக்கு எதிராக வழக்கு தொடுக்க வேண்டும் என்பதை ஆட்சியாளர்களே தீர்மானித்தனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை அமெரிக்கர் எனவும், சர்வாதிகாரி​னவும் விமர்சித்திருந்தாலும், அவர் வெற்றிபெற்றதன் பின்னர் நல்ல பல மாற்றங்களை முன்னெடுத்துள்ளார்.

அதேபோல், அவரின் வெற்றி இலங்கையின் பக்கம் முதலீட்டாளர்களின் அவதானத்தை ஈர்க்கச் செய்துள்ளது.

இன்றும் ஐ.தே.கவிடம் பெரும்பான்மை பலம் உள்ளதால் மூன்றில் இரண்டு அதிகாரத்தை பெற்றுகொடுத்து நாடாளுமன்றத்தை கலைக்க அக்கட்சி ஒத்துழைக்க வேண்டுமென” அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.