சுவிஸ் தூதரக பெண், குற்ற புலனாய்வு திணைக்களத்தில் ஆஜர்
கொழும்பிலுள்ள சுவிஸ் நாட்டு தூதரகத்தில் கடத்தப்பட்டு விசாரிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் அதிகாரி குற்றப் புலனாய்வு முன்னிலையில் ஆஜராகி உள்ளார்.
சர்ச்சைக்குரிய சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்கும் நோக்கில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
தேவைப்படின் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்வது குறித்து பரிசீலனை செய்யப்படுமென தெரிவிக்கப்பட்டது.
அவர் கடத்தப்பட்டு விசாரிக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் ராஜதந்திர ரீதியாக நெருக்கடிகளை ஏற்படுத்தியிருந்தன.
இந்நிலையில் நாளைய தினத்திற்குள் முன் அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் வாக்குமூலம் வழங்க வேண்டும் என கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment