Header Ads



அமைச்சர் ஜோன்ஸ்டனிடம், நீங்களும் முறையிடலாம்

தங்கள் பிரதேசத்திலுள்ள எந்தவொரு பிரச்சினைகளையும் அமைச்சரிடம் கூறுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் வகையில் Data Base முறையில் Tell Minister உத்தியோகப்பூர்வ முகப்புத்தக பக்கம் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

துறைமுகங்கள், கப்பல்துறை வீதி மற்றும் பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் அறிவுறுத்தலுக்கு அமைய குறித்த முகப்புத்தக பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலமாக தங்களுடைய பிரதேசங்களில் காணப்படுகின்ற பெருந்தெருக்கள் தொடர்பிலான பிரச்சினைகள் தெருக்களை உபயோகிக்கும் போது மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் நேரடியாக Ministry of Roads and Highways பக்கத்தின் கீழுள்ள Tell Minister சேவையின் ஊடாக அமைச்சரிடம் முறையிடலாம்.

மேலும் இலங்கையிலுள்ள பெருந்தெருக்கள், அதிவேக பாதைகள் தொடர்பிலான பிரச்சினைகளை நேரடியாக அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லலாம்.

பிரயாணங்களின் போது பயணிகள் முகங்கொடுக்கின்ற பிரச்சினைகள், வாகனங்களை செலுத்தும் பொழுது சாரதிகள் எதிர்நோக்குகின்ற வீதி சமிக்ஞைகள் தொடர்பிலான பிரச்சினைகள், வீதி விளக்குகள் தொடர்பிலான பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சரை தெளிவூட்டலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்புதிய திட்டத்தின் மூலம் நாட்டினுள் ஒழுக்கமான வீதி கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு தடங்களாக இருக்கும் சாரதிகள், பிரயாணிகள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பில் அமைச்சர் நேரடியாக கவனம் செலுத்துவது விசேட அம்சமாகும்.

வினைத்திறனான அரசாங்க சேவையினை மக்களுக்கு வழங்கும் பொருட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் திட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ இந்த செயற்பாட்டினை முன்னெடுத்துள்ளார்.

2 comments:

  1. Our Real Buddhist Minister... Welcoming all...

    ReplyDelete
  2. Very good system we appreciate it even though such system should be implemented for all the mysteries and all the ministries should be linked with only one major database link. so, people don't need to memorize everything instead they can memorize the main source for complaining. once entered, they can find out the other particular ministry to lodge the complaint.
    search very good system must be in practice for the all life. so that, people wont forget like emergency numbers of 119,118.

    ReplyDelete

Powered by Blogger.