Header Ads



லெஸ்டர் மாநகரில் வாழும் இலங்கை, முஸ்லிம்களுக்கான ஓர் அரசியல் விழிப்புணர்வுக் கூட்டம்


லெஸ்டர் மாநகரில் வாழும் இலங்கை முஸ்லிம்களுக்கான ஓர் அரசியல் விழிப்புணர்வுக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01/12/19) மாலை Northfields community centreல் இடம்பபெற்றது. 

இங்கிலாந்தில் எதிர்வரும் 12/12/19 அன்று இடம்பெற இருக்கின்ற பொதுத் தேர்தலில்  இங்கு வாழ்கின்றவர்களின் பங்களிப்பு எவ்வாறு அமைய வேண்டும், எமது வாக்குகளின் தாக்கம் என்ன , அதன் பொறுப்புடமை , முக்கியம் மற்றும் அரசியல் ரீதியாக எவ்வாறான செல்வாக்கை நாம் இங்கிருந்து கொண்டு எமது உறவுகளின் நலன்களில் பிரயோகிக்க முடியும் என்பன போன்ற பல விடயங்களை விளக்குவதாக இக் கூட்டம் அமையப்பெற்றிருந்தது. இக்கூட்டத்திற்கு தொழில் கட்சியின் லெஸ்டர் கிழக்கு பிராந்திய( இலங்கை முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதி) வேட்பாளர் Claudia Webbe  பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியதோடு தாம் ஆட்சி அமைக்கும் பட்சத்தில் விழையும் நன்மைகள் நாட்டிற்கும், சிறுபான்மையினருக்கும், எதிர்கால சந்ததிகளுக்கும், கல்வி வளர்ச்சிக்கும், இளைஞர்களுக்கும் எவ்வாறு அமையும் என்பதை தேர்தல் விஞ்ஞாபனத்திலிருந்து விளக்கியதோடு கட்சியில் தனது பங்களிப்பு எவ்வாறானது என்பதையும்  எடுத்தியம்பினார்.  இதில் MEND அமைப்பின் செயற்பாட்டாளர் சகோதரி சபீ(b)னா ரியாஸ் கலந்து கொண்டு இஸ்லாமோபோபியா பற்றியும் , கடந்தகால அசம்பாவிதங்கள் மற்றும் அதன் எதிர்வினைகள் என்ன ? அதனை எவ்வாறு எதிர்கொள்வதென்றும் அதற்காக வேணும் இத்தேர்தலில் எமது வாக்குகள் முக்கியம் என எடுத்துரைத்தார். 

இக்கூட்டத்தை SLMS-Uk , சில தொண்டர்கள் மற்றும் சமூக நலன்விரும்பிகள் சேரந்து ஏற்பாடு செய்திருந்தனர். சுமார் 250 க்கும் மேற்பட்ட இலங்கை முஸ்லிம்கள் குடும்ப சகிதம் சமூகமளித்து இந்நிகழ்வை உயிர்ப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

 SLMS-UK. — media unit


No comments

Powered by Blogger.