Header Ads



மைத்திரியை தாக்கிப்பேசிய, இராஜாங்க அமைச்சர்

கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவை தோற்கடிப்பதற்காக சூழ்ச்சிகளை செய்த பிரிவினருக்கு பொது தேர்தலுக்கான சின்னத்தை தெரிவு செய்ய இடமளிக்க போவது இல்லை என இராஜாங்க அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார். 

அஸ்கிரிய பகுதியில் வியாபாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை கூறியுள்ளார். 

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர், அங்கும் இங்கும் பாய்பவர்களை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்வது சிறந்ததல்ல. 

மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொடுத்து உதவி செய்வதாக சிறிசேன கூறுகின்றார். கடந்த 2015 ஆண்டிலேயே அவர் அதை நினைத்திருக்க வேண்டும். 

மக்கள் இறந்து மீண்டும் புதிதாய் பிறக்கவில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணையும் போது 70 வீதமான வாக்குகள் கிடைக்கு என நினைத்தோம். 

அவ்வாறு இணையாதிருந்தால் என்னாள் பெரும்பான்மை வாக்குகளை பெற்றிருக்க முடியும்.

அன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முழு மன சாட்சியுடன் ஒத்துழைக்கும் என நினைத்திருந்த போது அந்த கட்சியில் இருந்த சிலர் மீண்டும் சூழ்ச்சிகளில் ஈடுபட்டனர். 

சேபால ஜனவர்தனவுடன் இருந்த சிலர் தேர்தல் வாக்குகளை வேறு திசைக்கு கொண்டுச் செல்ல முற்பட்ட போது பொலன்னறுவையில் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கும் சுதந்திரக் கட்சிக்காரர்கள் ஒத்துழைப்பு வழங்கினர். 

அவ்வாறு செயற்பட்டவர்களுக்கு அடுத்த தேர்தலுக்கான சின்னம் என்னவென்று தீர்மானிக்க முடியாது. 

நாற்காலி சின்னத்தில் தோற்றதால் வெற்றிலை சின்னத்திற்கு மாறினர். அந்த சின்னத்தில் கேட்டும் தோல்வியடைந்தமையால் தாமரை மொட்டு சின்னத்திற்கு மாறினர். 

அப்படியானால் தாமரை மொட்டே தோல்வியடையாத வெற்றியின் ஒரே சின்னம். 

அடுத்த பொது தேர்தலிலும் தாமரை மொட்டு சின்னத்திலேயே போட்டியிடுவோம்´ என்றார்.

1 comment:

  1. அரசியல்வாதிகள் பகடைக்காய்கள், பொதுமக்களின் பணத்திலும் அவர்களின் அறியாமையிலும் சொகுசு வாழ்க்கை நடாத்துகின்றார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.