Header Ads



இது பௌத்த நாடு - முஸ்லிம் தீவிரவாதிகள் நாட்டில் சந்தேகத்தையும், அச்சத்தையும் உருவாக்கியுள்ளனர் - பாதுகாப்பு செயலாளர் கமால்


(வீரகேசரி)

விடுதலைப்புலிகள் புத்துயிர்  பெற முயலும்அதேவேளை தங்கள் மதத்தினை பிழையாக விளங்கிக்கொண்டுள்ள தீவிரவாத இளைஞர் குழுவொன்று நாட்டின் அமைதி நிலையை குழப்புவதற்கு முயலும் இந்தவேளையில் இவ்வாறன சக்திகளை கண்காணித்து நாட்டை பாதுகாப்பாக வைத்திருப்பதில் புலனாய்வு அமைப்புகள் ஆற்றவேண்டிய முக்கிய பங்களிப்பு உள்ளது என பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ண யாழ்ப்பாணத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

யாழ் குடாநாட்டிற்கான விஜயத்தின் போது படையினர்  மத்தியில் உரையாற்றுகையில் அவர் இதனைதெரிவித்துள்ளார்.

முஸ்லீம்தீவிரவாத சக்திகள் நாட்டில் பேரழிவை ஏற்படுத்தியுள்ள என தெரிவித்துள்ள பாதுகாப்பு செயலாளர்  அவர்கள் நாட்டின் பொருளாதாரத்தைஅழித்துள்ளதுடன் சந்தேகத்தையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து முழுமையான விசாரணைகள் அவசியம் என குறிப்பிட்டுள்ள கமால்குணரட்ண  இந்த பயங்கரவாத தாக்குதல்களிற்கு யார் காரணம் என்பதை கண்டறியவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இது பௌத்த நாடு, மக்களிற்கு தமதுசொந்த மதங்களை பின்பற்றுவதற்கான உரிமையுள்ளது,அனைத்து மதத்தினரும் அமைதியாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்துவதுபடையினரின்கடமை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

4 comments:

  1. இப்போ நாட்டில் ஜனநாயகமில்லை மாறாக இராணுவ ஆட்சியே அரங்கேற்று இருக்கிறது எங்கு பார்த்தாலும் முன்னால் முன்னால் ஓய்வுபெற்ற இராணுவவீரர் தன் கடமைகளை பொறுப்பேற்று கொண்டார் கதை தான் தொடர்கிறது.

    எவனோ ஒருத்தன் முஸ்லீம் பெயரில் குண்டை வைத்தான் செத்து போனான் அதோடு file close ஆனால் அரசியல்வாதிகள் அந்த தாக்குதல் வைத்து இன்னும் நாட்டின் இனப்பிரச்சினையும் அதன் அடிப்படையில் சிறுபான்மை மக்களின் உரிமைகளை இன்னும் நசுக்கவும் முயற்ச்சி செய்ய முன்படுகிறார்கள்.சிறுபான்மையினரை அடக்கி மேலும் இராணுவ செலவுகளை அதிகரித்தும் நாட்டை ஒருநாளும் முன்னேற்றம் செய்ய முடியாது.

    இலங்கை மக்கள் ஜனநாயக சோசியச நாடு இது எந்த சமயத்தினருக்கும் சொந்தமில்லை.

    ReplyDelete
  2. ITHU MUSLIMGAL SHEITHA SHEYAL
    ALLA, MUSLIM PEYARKALAI VAITHUKONDU
    ISLATHITTKUM,MUSLIMGALUKKUM
    KETTA PEYARAI, ETPADUTHUVATHARKU
    SHEITHA,KARIYAM.INDA THATKOLAI THEEVIRAVATHIKAL,INNUM INDA NAATTIL, IRUNDAL, ANDAPAAVIKALAI INAMKANDU,NIROOPIKKAPATTAL,
    ANDA THATKOLAI,THEEVIRAVATHIKALUKKU,
    MARANATHANDANAI, NIRAIVETRAPPADA
    VENDUM,

    ReplyDelete
  3. still there are a lot of ISISs in east

    ReplyDelete
  4. Still there are lots of LTTE in North and East.

    ReplyDelete

Powered by Blogger.