தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை, கலாசார சர்வதேச ஆய்வு மாநாடு
- பாறுக் ஷிஹான் -
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை, கலாசார பீடத்தினுடைய 08ஆவது சர்வதேச ஆய்வு மாநாடு,புதன்கிழமை(18) காலை பல்கலைக்கழகத்தின் கலை,கலாசார பீட மண்டபத்தில் ஆரம்பமானது
அரசியல் விஞ்ஞானத்துறை சிரேஷ்ட விரிவுரையாளரும் இம் மாநாட்டின் இணைப்பாளருமான கலாநிதி எம். அப்துல் ஜப்பாரின் வழிப்படுத்தலின் கீழ், 'ஆய்வு மற்றும் புத்தாக்கத்தின் ஊடாக, சமூதாய மேம்படுத்தல்' எனும் கருப்பொருளில் இந்த மாநாடு இடம்பெற்றது.
இந்த மாநாட்டுக்கு கலைஇ கலாசார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர் தலைமை தாங்கியதுடன் அமெரிக்காவின் 'சலிஸ்பரி' பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி பேராசிரியர் கீத பொன்கலன் இம்மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம், இந்த மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டனர்.
Post a Comment