Header Ads



எதுன்கஹகொட்டுவ மத்திய கல்லூரி, கஸீதா போட்டியில் முதலிடம்

பாடசாலைகளுக்கு இடையிலான அகில இலங்கை ரீதியிலான கஸீதா போட்டி இன்று 14.12.2019 அன்று கண்டி சித்தி லெப்பை கல்லூரியில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் ஏற்கனவே கல்வி வலைய, மாவட்ட, மாகாண  ரீதியில் நடைபெற்ற போட்டிகளில் முதலிடம் பெற்ற 9 மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். 

அகில இலங்கை ரீதியிலான இறுதிப் போட்டியில் வடமேல் மாகாணம், குருநாகல் மாவட்டம், குளியாபிட்டிய கல்வி வலையத்திற்கு உற்பட்ட எதுன்கஹகொட்டுவ மத்திய கல்லூரியின் மாணவன் எம். முஸ்னி மும்தாஸ் முதலிடத்தை பெற்றுக் கொண்டார். இது  பல வருடங்களுக்கு பின் பாடசாலைக்கு கிடைத்த தேசிய ரீதியிலான வெற்றியாகும்.

மும்தாஸ் சர்மிளா தம்பதிகளின் மூத்த புதல்வரான இவர் 2016 ஆண்டு புலமைப்பரிசீல் பரீட்சையில் கல்லூரியில் 158 புள்ளிகளை பெற்று சித்தியடைந்த ஒரே மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

தொடர்ந்தும் கல்வி, கலாசார, விளையாட்டு போன்ற அனைத்து துறைகளிலும் பாடசாலை, மாவட்ட, மாகாண ரீதியில் வெற்றி பெற்று வரும் இவர் இன்னும் பல வெற்றிகளை பெற வாழ்த்துகிறோம்.

அதே நேரம் வெற்றி பெற்ற மாணவன் முஸ்னி முதலில் வல்ல இறைவனுக்கும், இப்போட்டிக்காக தனக்கு பல வழிகளிலும் வழிகாட்டிய பெற்றோர்கள், குடும்பத்தினர் மற்றும் பாடசாலை அதிபர் உட்பட ஆசிரியர்களுக்கும் குறிப்பாக தன் இந்த போட்டியில் வெற்றி பெற மாவட்ட, மாகாண மட்டம் தொடக்கம் இன்று வரை அயராது பாடுபட்டு உழைத்த ரிஸ்லா ஆசிரியை , மாஜித் ஆசிரியர் ஆகியோருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறார்.

1 comment:

Powered by Blogger.