Header Ads



தற்போது புதிய தலைவர் ஒருவரை கொண்டுவருவதே எனது தேவையாக உள்ளது - ரணில்

ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய தலைவர் ஒருவரை முன்கொண்டுவர தயார் என அந்த கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

பல்கலைக்கழக இளைஞர் முன்னணியின் செயற்பாட்டாளர்களுடன் இன்று (17) இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். 

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் எம்மால் பொறுமையாக ஓர் இடத்தில் இருக்க முடியாது. 

எனவே முன்னோக்கி பயணிக்க உங்கள் அமைப்பின் ஆலோசனைகள் தேவை. பல்வேறு தொழிற்சங்கங்கள் பல கருத்துகளை முன்வைத்துள்ளன. அதற்கமைய ஜனவரி மதத்தில் இருந்து நாம் முன்னாள் பயணிப்போம். 

நான் தொடர்ந்தும் இதில் இருக்கமாட்டேன். தற்போது புதிய தலைவர் ஒருவரை கொண்டுவருவதே எனது தேவையாக உள்ளது. அனைவரும் வேறுபாடுகளை புறந்தள்ளி திட்டம் ஒன்றை கொண்டுவருமாறு ஆலோசனை வழங்கியுள்ளேன். 

சஜித் பிரேமதாச உள்ளிட்டவர்கள் பாராளுமன்ற செயற்பாடுகளுக்கு பொறுப்பானவர்கள். அனைவரும் ஒன்றாய் இணைந்து பணியாற்றி கட்சியை முன்கொண்டு செல்ல வேண்டும்´.

2 comments:

  1. When are you going to do it?

    ReplyDelete
  2. Ranil and Sumanthiran are trouble creating leaders of entire srilanka politics, they should be eliminated from the parliament politics for the future peace of Srilankans

    ReplyDelete

Powered by Blogger.