பாண் தவிர்ந்த பேக்கரி உற்பத்திகளின், விலைகளை குறைக்க தீர்மானம்
பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகள் குறைக்கப்பட உள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஏ.ஆர். ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
பெறுமதி சேர் வரி மற்றும் தேசத்தை கட்டியெழுப்புதல் வரி ஆகியன தொடர்பில் அரசாங்கம் வழங்கியுள்ள சலுகைகளை மக்களுக்கு வழங்கும் நோக்கில் இவ்வாறு விலை குறைப்பு அறிமுகம் செய்யப்பட உள்ளது.
பனிஸ் வகைகள் உள்ளிட்ட ஏனைய பேக்கரி உற்பத்தி வகைகளின் விலைகள் 5 ரூபாவினால் குறைக்கப்பட உள்ளது என ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் வரிக் கொள்கையினால் பேக்கரி உரிமையாளர்களுக்கு பாரியளவு சலுகைகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வரிச் சலுகை காரணமாக ஒரு கிலோ கேக்கின் விலையை 50 ரூபாவினால் குறைக்க முடியும் என ஜயவர்தன ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
Post a Comment