Header Ads



ஊடக சுதந்திரத்திற்கு எவ்வித, பாதிப்பும் என்னால் ஏற்படுத்தப்படாது - ஜனாதிபதி கோட்டாபய உறுதி

ஊடகங்கள் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டின் ஊடக சுதந்திரத்திற்கு எவ்வித பாதிப்பும் தம்மால் ஏற்படுத்தப்படாது என்பதனை திடமாக கூற முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு நீதியான விமர்சனங்களையும் செய்வதற்கு இடமுண்டு எனத் தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கும் நாட்டின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தாத வகையில், ஊடகங்கள் தங்களது பணிகளை மேற்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய தாம் பல்வேறு அபிலாஷைகளை ஏந்திக்கொண்டு பதவியில் அமர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகள், அரசாங்க பணியாளர்கள் சிறந்த வினைத்திறனுடன் செயற்படுவதற்கும் ஊழல் மோசடிகளை இல்லாதொழிப்பதற்கும் தாம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஊடக நிறுவனங்களின் பங்களிப்பு அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுவிற்சர்லாந்து தூதரத்தில் பணியாற்றிய இலங்கைப் பெண் கடத்தப்பட்டதாக வெளியான செய்திகள் சர்வதேச ஊடகங்களுக்கு தேவையான வகையில் வெளியிடப்பட்டவை எனவும் அது குறித்து தாம் வருத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிழையான தகவல்களை சரியான முறையில் வெளியிடும் பொறுப்பும் உள்நாட்டு ஊடகங்களைச் சாரும் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.