Header Ads



முஸ்லீம் சமூகம் தங்களை சுற்றி என்ன, நடக்கிறது என புரிந்துகொள்ள வேண்டும்

 - Farzan -

அவர்கள் நினைத்ததை சாதித்துவிட்டார்கள் ,ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் முஸ்லிம்களை நோக்கிய இனவாதம் தனியும் என்ற எதிர்பார்ப்புக்கள் நலிவடைந்து வருவதை காணமுடிகிறது.

சிங்கள ஊடகங்கள் தேர்தலுக்கு முந்திய பாணியிலான நிகழ்ச்சிகளை மீட்டத்தொடங்கியுள்ளன. டாக்டர் ஷாபிக்கு எதிராக விசாரணை கமிஷன் வேண்டும் என்று ரத்தன தேரர் கூறிவருகிறார், முஸ்லிம்களின் ஒரே கல்விக்கூடமான ஜாமியா நளீமியாவுக்கு பயங்கரவாதம் பூசப்படுகிறது. நளீமியாவில் படித்த முஸ்லிம்களுக்கு உயர்பதவிகள் வழங்கப்பட கூடாது என்று அவர் சொல்கிறார். அமைச்சர்கள் மட்டும் இல்லை, அமைச்சின் செயலாளராக கூட ஒரு முஸ்லீம் வந்து விட கூடாது என்பது அவரது அபிப்ராயம்.

இலங்கை முஸ்லிம்கள் எதை நோக்கி போகிறார்கள்:

இலங்கையில் சிங்கள பவுத்த பேரினவாதத்தின் முகத்தை ஒருசில தனிநபர்களுடனும், சில ஊடகங்களுடனும், சில அரசியல்கட்சிகளுடனும் மட்டுமே பொருந்திப்பார்த்து பழகிப்போன இலங்கை முஸ்லீம் சமூகம் அந்த பேரினவாதத்தின் முழுப்பரிமாணத்தையும் காண தவறிவிட்டது.

பவுத்த பேரினவாதம் கவனமாக வளத்தெடுக்கப்பட்ட ஒரு சித்தாந்தம். காலனித்துவ ஆட்சியில் அநகாரிக தர்மபால போன்றோரால் தொடங்கி சிறுக சிறுக வளர்க்கப்பட்டு அது முதலில் தமிழர்களின் உரிமையை பறித்தது. அதற்க்கு எதிரான தமிழர்களின் கடும் போராட்டத்தின் விளைவாக, அந்த பேரினவாதம் முஸ்லிம்களுடன் ஒரு தற்காலிக சமரசத்தை செய்துகொண்டது.

2009 ஆண்டு தமிழர்களின் போராட்டம் தோற்கடிக்க பட்டதன் பின்னர் பவுத்த சித்தாந்தம் முஸ்லிம்களுடனான தற்காலிக சமரசத்தை முறித்துக்கொண்டு நேரடியாக இந்த சிறுபான்மை இனத்தின் அடையாளத்தின் மீதும் இருப்பின் மீதும் கைவைத்தது.

கோத்தபாயவும், அவரை சுற்றியுள்ள தேரர்களும் இந்த சித்தாந்தத்தின் அரசியல் முகங்கள், அவர்கள் ஒரு கூறு மட்டுமே. இந்த பேரினவாத சித்தாந்தம் இந்த முகங்களையும் தாண்டி ஆழமானது. அது சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் வேரூன்றி வியாபித்து இருக்குறது. இந்த பேரினவாத சித்தாந்தத்தின் ஆழத்தையும் அதன் வரலாற்றுப் போக்கையும் , ஏனைய இனங்களின் இருப்பை கேள்விக்கு உள்ளாக்கும் அதன் விருப்பத்தையும், ஆளுமையையும் முழுமையாக புரிந்துகொள்ளாமல் இலங்கை முஸ்லீம்கள் தங்களை ஒரு அழிவில் இருந்து பாதுகாத்துக்கொண்டு முன்னோக்கி நகர முடியாது.

கடந்த தேர்தலின் பின் பல்வேறுபட்ட முஸ்லீம் அறிஞ்சர்களாலும் சமூக குழுக்களினாலும் முன்வைக்கப்படும் யோசனைகள் பெரும்பாலும் இருப்பை நோக்கிய ஒரு சமரச முயற்சிக்கவே பார்க்க முடிகிறது.

இரண்டு பிரதான கட்சிகளில் இருந்தும் தேர்தலில் போட்டியிடுவது, ஆளும்தரப்புடன் இணக்க அரசியலில் ஈடுபடுவது என்று பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்படுகின்றன. இவை காலத்தின் கட்டாயமும் மாற்று வழி இல்லாத ஒரு சூழ்நிலையின் தெரிவும். இவை தவறு என்றும் கூறுவதற்கு இல்லை. ஆனால் பிரச்சினை இத்தோடு தீரப்போவதில்லை. இரண்டு முஸ்லீம் அமைச்சர்கள் கோத்தபாய அரசாங்கத்தில் இடம்பெறுவதால் மட்டும், வளர்த்தெடுக்கப்பட்ட சிங்கள பவுத்த பேரினவாதம் முஸ்லிம்களை சக பிரஜைகளாக இணைத்துக்கொள்ளும் என்று எதிர்பார்ப்பதற்கு இல்லை.

ஆளும் தரப்பால் இயக்கப்படும் ஊடகங்களில் இருந்தும், காவி உடுத்தவர்களிடம் இருந்தும் அன் மைக்காலமாக வெளிவரும் கருத்துக்கள் ஒரு நிச்சய ஆபத்தின் மொழிவு போல் உள்ளது. நளீமியா போன்ற ஒரு கல்விக்கூடம் இயங்குவதை கூட பொறுத்துக்கொள்ளும் நிலையில் அவர்கள் இல்லை. முஸ்லீம் சமூகத்தின் கல்வியை கட்டம் கட்டமாக அழிப்பதன் மூலம் கலாசார தனித்துவத்தையும் அதன் அடையாளத்தையும் காலப்போக்கில் இல்லாமல் பன்னலாம்.

நளீமியா போன்ற பல்கலை கழகங்களில் படித்து வெளிறுவோர் அரசாங்க உயர்பதவிகளை பெறுவதாகவும் அவர்கள் இஸ்லாமிய அடிப்படை வாத சிந்தனை கொண்டவர்கள் என்ற கருத்திலான ஞாசராவின் அன்மய கூற்று ஒன்றை சொல்கிறது, ஏற்கனேவே பேரினவாத மயமாக்களில் மூழ்கியிருக்கும் சட்டம், நீதி உள்ளிட்ட அரச சேவைகளில் எஞ்சியிருக்கும் ஒருசில முஸ்லிம்களும் துரத்தப்பட்ட இருக்கிறார்கள்.

ரவூப் ஹக்கீமுக்கு பதிலாக அலி சப்ரி வருவதால் தீரும் பிரச்சினை அல்ல இது.

இலங்கை முஸ்லீம் சமூகம் முதலில் தங்களை சுற்றி என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும். ஒரு சிலந்தியின் வலைபோல் தொடங்கி விகாரை விகாரையாய் விரிவாக்கப்பட்டு வளர்க்கப்பட்டிருக்கும் இந்த பவுத்த பேரினவாத சித்தாந்தத்தை முஸ்லீம் சமூகம் காணவேண்டும். எதிர்காலத்தை நோக்கிய எந்தவொரு முன்மொழிவும் முயற்சியும் அந்த சித்தாந்தத்தின் ஆளுகையில் இருந்து எம்மை எப்படி பாதுகாப்பது என்ற புள்ளியில் இருந்து தொடங்க வேண்டும். 

13 comments:

  1. பர்சான்,
    நீங்களும் ஒரு வகையில் இனவாத சாயலிலேயே எழுதியுள்ளீர்கள்.முதலில் நமது பக்க தவறுகளை அடையாளம் காணுவதும் அவற்றுக்கான மாற்று வேலைத்திட்டங்களையும் முன்வைப்பது அவசியமாகும். சிங்களவர் மத்தியில் எம்மைப்பற்றி உசுப்பேத்திய விடயங்கள் ஏராளம்.அவற்றுள் சில:
    # முஸ்லிம் தனித்துவ அரசியல் கட்சிகள்.
    # வீதிக்கு வீதி அருகருகே பள்ளிவாசல்கள்.
    # ஏட்டிக்குப் போட்டியாக ஆளுக்கொரு இயக்கம்.
    # ஆலிம் தவிர்ந்த ஏனையோரும் ஜுப்பா அணிந்து ஊர்வலம்
    # முகம் மூடுவதா? திறப்பதா ? மேடை போட்டு சண்டை.
    # கறுப்பு அபாயா ஊர்வலம்.
    # ஸ்பீக்கர் கட்டி கேவலமான முறையில் பாங்கு சொல்வது
    # சிங்களவர்களோடு விவாதத்திற்கு அழைப்பு விடுவதும் சவால்
    விடுவதும்.
    # அரசிடமுள்ள முக்கியமான அமைச்சுக்களை பேரம் பேசி கபளிகரம் செய்தல்.
    இவ்வாறு இன்னும் எழுதமுடியாத எத்தனையோ விடயங்கள் உள்ளன.
    இவற்றுக்கு தீர்வுகளை எழுதுங்கள்.
    மக்களை மேலும் மேலும் தனிமைப்படுத்தி துவேசத்திற்கு வித்திடாதீர்கள்.

    ReplyDelete
  2. LET THE MUSLIMS FACE REALITY NOW, Insha Allah.
    The Sri Lanka Muslim Community and its POLITICIANS should stand before a “MIRROR” and ask the question WHY? Let us face REALITY and the TRUTH (YATHAARTHAM).

    1. We Muslims are known for NOT leading the Muslim (Islamic Way of Life) bestowed by our belief and FAITH.

    2. We are (especially) the POLITICIANS) are NOT UNITED.

    3. We (especially the POLITICIANS) are DISHONEST, DECEPTIVE, SELFISH and CROOKED.

    4. Our dealings are NOT CLEAN with other Communities.

    5. We have BETRAYED the political leaders of the country who are so much loved by the MAJORITY SINHALA PEOPLE.

    6. We are ARROGANT and EXTRAVAGANT in our day to day life.

    7. We are SELF CENTERED and NOT COMMUNITY MIMDED.

    8. WE are OPPRTUNISTIC, especially in POLITICS. Our Muslim Politicians have back-stabbed the most loved Sinhala leaders like the former President after STOOGING to him and his siblings and politically destroyed them which the Buddhist, especially the Monks despite.

    9. We will “buy” anyone by our ill earned money power to get our things done, even against our community and its members.

    10. We practice the CULTURE of SMUGGLING and dealing in DRUGS as normal business though it is banned in ISLAM, and we think going to Mecca (making UMMRAH) purifies us from those SINS.

    The Bodu Bala Sena and the Anti-Muslim, Ant-Islam Buddhist Monk was made use by our Muslim unscrupulous POLITICIANS and Muslim businessmen to defraud the Haj Quota allocations in the HE. Mahinda Rajapaksa regime in 2010. So, GANESARA THERA KNOWS MORE ABOUT THE BAD THINGS ABOUT OUR COMMUNITY THAN OUR OWN COMMUNITY BECAUSE ALL FINANCIAL AND BUSINESS INFORMATION OF OUR MUSLIM BRETHEREN ENGAGED IN BUSINESS HAS BEEN REVEALED TO HIM AND THE BBS BY MUSLIMS LIKE AZAD SALLY AND HIS BROTHER.
    THIS IS WHY "THE MUSLIM VOICE" IS PRAYING IT IS TIME UP THAT A NEW POLITICAL FORCE THAT WILL BE HONEST AND SINCERE THAT WILL PRODUCE 'CLEAN' AND DILIGENT MUSLIM POLITICIANS TO STAND UP AND DEFEND THE MUSLIM COMMUNITY POLITICALLY AND OTHERWISE, ESPECIALLY FROM AMONG THE YOUTH/YOUNGER GENERATION HAS TO EMERGE FROM WITHIN THE SRI LANKA MUSLIM COMMUNITY TO FACE ANY NEW ELECTIONS IN THE COMING FUTURE, INSHA ALLAH. WE HAVE GOT THE OPPORTUNITY NOW TO DO IT THROUGH THE SLPP, AS STATED BY STTORNEY-AT-LAW ALI SABRY, Insha Allah.
    Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP/SLPP Stalwart and Convener - The Muslim Voice.

    ReplyDelete
  3. RISHADUM, HAKEEMUM, THUVESHATHAI
    KILARIYATHU POTHATHA?
    NEEYUM ERIYIRA NERUPPILA ENNAYA
    OOTHUKIRAI.
    NEEYUM ORU THUVESHATHAI
    VALARPAVAN.

    ReplyDelete
  4. imthiyas@@ஹக்கீம்,ரிஷாது என்ன யாருக்கு துவேசம் புரிகிறார்கள் என்பதை கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள்?

    ReplyDelete
  5. Hi hi Mohamed lafir ur real name plz

    ReplyDelete
  6. Dayavu seyzu poththittu ponga. Ungala pola muttalgal than innum engada samoohaththa kuliyila poda try panra. Thanimaippaduththappattu thooki eriyappattullom. Unga rishardum hakeemum parththa welai izu. Muzalla avangala thiruththa article eluzunga.

    ReplyDelete
  7. Farzan I accept your position

    ReplyDelete
  8. ALI SABRI WHO IS HE, WHEN HE TALKING ABOUT MUSLIM UMMA, HE IS SELFISH IF MUSLIM UMMA WENT BEHIND HIM, THEIR ONLY UTTER FOOLISH

    ReplyDelete
  9. பர்சானின் கட்டுரையும் விவாதங்களும் முக்கியமானவை. இவற்றை நாங்கள் சொன்னால் முனாபிக் காபீர் என முத்திரை குத்தி ஒதுக்கிவிடுகிறார்கள். இன்றைய இருளில் இத்தகைய விவாதங்கள்தான் ஒளியாக முடியும். இத்தகைய விவாதங்களில் முஸ்லிம் அறிவு ஜீவிகளும் முஸ்லிம் பல்கலைக்கழக சமூகமும் பிரமுகர்களும் கலந்து கொள்ளுவது அவசியம். ஜப்ணா முஸ்லிம் இத்தகைய கட்டுரைகளை விவாத மேடை என புதியதொரு பக்கத்தில் சேர்த்து விவாதங்களை ஊக்குவிக்க வேண்டும்.

    ReplyDelete
  10. ARASHIYAL LAAPAM THEDI
    PAAMARA MUSLIM MAKKALIN MANAZIL
    THUVESHATHAI UNDU PANNI FITHNAVAI UNDAAKKUM UNNAIPONRAVARKAL
    MOUTHAYUM, ALLAHVAIUM
    PAYANDUKOLLATTUM.
    THUVESHIKAL

    ReplyDelete
  11. RISHADUM, HAKEEMUM, ARASHIAL
    MEDAIKALIL,THUVESHATHAI THAVIRA
    VERU ETHAI SHOLLI KATHINANKAL.
    ABU THALIBUKKUM, ABU JAHLUKKU
    VITHIYASHAM THERIYATHA, POLIKAL.

    ReplyDelete
  12. கட்டுரையாளரின் கூற்றில் உண்மைகள் இருக்கின்றன. ஏன் சிங்களவர்கள் இணைந்தனர் ஏன் முஸ்லீங்களின் எதிரியாக மாறியுள்ளனர் என்பதனையும் ஆராய்வதற்கு முஸ்லீங்கள் சுயவிமர்சனம் செய்யத்தயாரில்லை என்றால் சமரசம் வெகு தொலைவுக்குச் சென்றுவிடும். Mr. Lafir போன்றோர் சுயவிமர்சனம் செய்யும் போது தங்களின் பெயர்களைக்கூட இத்தளத்தில் பதிவதற்கு முதுகெலும்பில்லாதவர்கள் உங்களின் உண்மைப்பெயர் என்ன என்றும் அற்பர்கள் என்றும் பதிவிட்டு தங்களின் நிதானமில்லாத இனப்பற்றையும் மதப்பற்றையும் வௌிப்படுத்தி குறைகுடம் எனபதனைக் காட்டிக்கொள்கின்றனர். மங்கள சமர வீர தன் சமூகத்தில் உள்ள குறைபாடுகளை சுயவிமர்சனம் செய்யும் போது வாழ்த்துக் கூறி குதூகலிக்கும் முஸ்லீம் விமர்சகர்கள் தங்களைப்பற்றி தமது சமூகத்தவர் விமர்சனம் செய்யும் போது துடித்துப் போய் விடுகின்றனர். முஸ்லீம் விரோத பிரச்சாரத்தின் மூலம் அமெரிக்காவிலும்,இந்தியாவிலும், இலங்கையிலும் ஏனைய சமூகத்தை ஒன்று சேர்க்க முடியுமாக இருந்திருக்கின்றதென்றால் அது மூஸ்லீங்களின் சறுக்கலாக இருக்கிறதா? அல்லது ஏனைய சமூகம் முழுவதுமாக மடைமையில் இருக்கிறது என்ற தர்க்கமா? எங்கோ ஒரு இடத்தில் முஸ்லீங்களால் ஏனைய சமூகத்துடன் இணைந்து போக முடியாத தடங்கல் உள்ளது என்பதனை எங்களால் புரிந்து கொள்ளவதற்கு எமது அளவு கடந்த இனப்பற்றும் மதப்பற்றும் தடுக்கின்றது என்பது எனது தாழ்மையான கருத்தாகும்.

    ReplyDelete

Powered by Blogger.