சுவிட்சர்லாந்து வெளிவிவகார, திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை
சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரி தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை விமர்சித்து, அந்நாட்டு வௌிவிவகார நடவடிக்கை திணைக்களம் அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது.
உண்மைக்குப் புறம்பான தகவல்களை வௌியிட்டதாகக் குற்றஞ்சுமத்தி, சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரியைத் தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்துவதை தாம் கண்டிப்பதாக திணைக்களம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும்போது நாட்டின் நீதி மற்றும் சர்வதேச தரத்திற்கு அமைய, குறித்த அதிகாரியின் தனிப்பட்ட உரிமைகள் பாதுகாக்கப்படுவதுடன் அதனை உறுதி செய்வது இந்நாட்டு நீதிமன்றத்தின் பொறுப்பாகும் எனவும் சுவிட்சர்லாந்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தூதரக அதிகாரி சார்பில் தாம் தொடர்ந்தும் முன்னிற்பதாகவும் அவருக்காக தாம் இயன்றவளவான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும் சுவிட்சர்லாந்து வௌிவிவகார நடவடிக்கை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கும் நாடு என நற்பெயரைக் கொண்டுள்ள இந்தத் தருணத்தில், குறித்த தூதரக அதிகாரியின் உடல்நல பாதிப்பு தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அறிக்கையூடாக வலியுறுத்தியுள்ளது.
இந்தப் பிரச்சினை குறித்து மத்தியஸ்த மற்றும் ஆக்கபூர்வ நடவடிக்கைகளை எதிர்ப்பார்ப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்து தூதரக அதிகாரியின் விடயம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் சுவிட்சர்லாந்து வௌிவிவகார நடவடிக்கை திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
1987ல் பிரபாகரன் இந்தியாவோடோ 2006ல் அமரிக்காவோடோ இணங்கிபோகாமல் பகைத்தமையால்தான் தோற்றுபோனார். இல்லையேல் 1987 அல்லது 2006ல் போர் நின்றிருக்கும். இப்ப பிரேமதாசாவால் எங்கள் வீரன் என பாராட்டப்பட்ட பிரபாகரன் இல்லை. இன்றைய நிலமையும் சவால்களும் வேறு. மீண்டும் பிரச்சினையை வளர்க்காமல் அதிகாரப்பகிர்வுபற்றி ஜனாதிபதி பேசவேண்டும்.
ReplyDeleteஜெயபாலன் ஐயா!
ReplyDeleteகாலனித்துவ காலத்தில் முழு அளவில் தமிழ் தலைவர்களும் ஒரு சில சிங்கள தலைவர்களும் ஐரோப்பிய ஆட்சியாளர்களை ஆதரித்ததோடு மட்டுமல்லாமல் அவர்களது சமயங்களையும் பின்பற்றி ஆட்சி அதிகார சலுகைகளைப் பெற்றுக் கொண்டனர்.
சிங்கள பௌத்த தலைவர்களின் குடும்பங்கள் தமது குலப் பெயரையே மாற்றிக் கொண்டனர். eg.JR
தமிழ் தலைவர்கள் தமது விகிதாசாரத்திற்கும் மேலதிகமாக அரசியல் அதிகாரம், பொருளாதாரம், கல்வி,நிலம்,வேலைவாய்ப்பு என அநேக வரப்பிரசாதங்களைப் பெற்றுக் கொண்டனர்.
இதனால் சுதந்திர போராட்டத்தில் மேலோட்டமான ஆதரவுடன் உள்ளார்ந்த ரீதியாக நயவஞ்சகமாகவும் நடந்து கொண்டனர்.இதன் ஒரு வெளிப்பாடு தான் 50:50 கோரிக்கையும்.
இவ் ஒவ்வொரு சந்தர்பத்திலும் இலங்கை முஸ்லிம்கள் நாட்டு நலனின் பக்கமே நின்றார்கள் எனபது வரலாற்றில் பொற்பதிவு ஆகும்.
இருந்தாலும் சுதந்திர இலங்கை அரசு சிறுபான்மைகளுக்குரிய அத்தனை உரிமைகளையும் சலுகைகளையும் வழங்கியே வந்துள்ளன. ஒரு சில விதிவிலக்கான சிறிய சம்பவங்கள் தவிர.
இந்நிலையில் காலனித்துவ ஆட்சியில் அனுபவித்த அத்தனை அதிகரித்த சலுகைகளும் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என எதிர்பார்ப்பதும் அதற்காக ஆயுதம் ஏந்திப் போராடியதும் மடமை தானே.
ஐயா ,இந்த வரலாறுகளை கல்லறையில் போட்டு மூடிவிட்டு,அதிகாரப் பகிர்வு,ஆட்சி அதிகாரம் என்று கூக்குரலிடுவதன் நியாயம் தான் என்ன?
ஐயா, ஆண்ட பரம்பரை ,வீரத் தமிழன் என்று சிலர் தமக்குத் தாமே பட்டம் சூட்டுகின்றனர்.இந்தியாவின் தெற்கே சேர சோழ பாண்டியர் என தங்களுக்குள் சண்டையிட்டதற்காகவா இப்பட்டம்? தங்களுக்கென ஒரு தமிழ் தேசம் வேண்டும் என்பதற்காக இலங்கையை பிரிப்பதா? அவ்வாறு நியாயம் காண்பதாயின் முதலில் தமிழ் நாட்டை அல்லவா இந்தியாவில் இருந்து பிரிக்க வேண்டும்.
சிங்களவர்களோடும் முஸ்லிம்களோடும் கூடிவாழ இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் தமிழர்களை விடவுமில்லை.அதற்கான வேலைத்திட்டங்களை செய்யவுமில்லை.
போராட்டம் போராட்டம் என்றே மக்களை திசைதிருப்பிவிட்டார்கள்.
இன்னும் எத்தனையோ உண்டு நேரடியாக விவாதிக்க....
அன்புக்குரிய மொகமட் லாபீர். முஸ்லிம்கள் நலமாக இருக்கவேண்டுமென எப்போதும் நினைப்பவன் நான். உங்கள் கனவுகள் மெய்ப்பட வேண்டும். தமிழர்கள் உயர்ந்த பட்ச்ச அதிகார பகிர்வை பெறும் காலம் வெகுதொலைவில் இல்லை. ஆனால் உங்களோடு வாதிடவோ முரண்படவோ ஒருபோதும் விரும்ப மாட்டேன். நல் வாழ்த்துக்கள்.
ReplyDelete