ரணில் விரும்பி விலகினால் தவிர, அவரை பதவி விலக்க முடியாதா..?
ஐக்கிய தேசிய கட்சியின் யாப்பில் கட்சி தலைவருக்கு உள்ள அதிகாரங்கள் குறித்து ஆராய்ந்து மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் தொடர்பான யோசனையை முன்வைக்குமாறு கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் சட்டத்தரணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சியின் சிரேஷ்ட சட்டத்தரணிகளுடன் நேற்று நடத்திய சந்திப்பின் போது அவர் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருக்கு உரிய அதிகாரங்களில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தம்மிடம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய கட்சிக்குள் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக குறித்த மாற்றங்கள் தொடர்பான ஆவணம் ஒன்றை தயாரிக்க வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது நடைமுறையில் உள்ள கட்சியின் யாப்புக்கு அமைய ஆறு வருட காலத்திற்காக கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுகிறார்.
தலைமைத்துவத்திற்காக ஒருவர் தெரிவானால், அவர் தமது சுயவிருப்பின் பேரில் பதவி விலகினாலே தவிர, அவரை பதவி விலக்குவதற்கான ஏற்பாடுகள் இல்லை என்பதை கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களின் அவதானத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment