Header Ads



முஸ்லிம் நாடுகளில் மரணிக்கும், இலங்கையர்களின் எண்ணிக்கை வெளியாகியது

கடந்த மூன்று வருடங்களில் சுமார் 1000 இலங்கையர்கள் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதனை தெரிவித்துள்ளது. இதன்படி 29 நாடுகளில் பணியாற்றிய 1043 பேர் உயிரிழந்துள்ளனர்.

பல்வேறு காரணங்களில் இந்த உயிரிழப்புக்கள் நிகழ்ந்துள்ளன. 2019 ஜனவரி முதலாம் திகதி முதல் டிசம்பர் 4ம் திகதி வரை 194பேர் பணிகளில் ஈடுபட்டிருக்கும்போது உயிரிழந்தனர்.

இது 2018ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறைந்த உயிரிழப்பாகும். 2018ம் ஆண்டு இந்த இறப்புத்தொகை 239ஆக இருந்தது.

2016- 2019 வரையில் சவூதியில் 362பேரும், குவைத்தில் 214பேரும் கட்டாரில் 133 அபேரும், தென்கொரியாவில் 32பேரும் உயிரிழந்தனர்.

இதேவேளை வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் 2018 இல் மாத்திரம் இலங்கைக்கு 7 பில்லியன் டொலர்களை தமது நாட்டுக்கு அனுப்பியுள்ளனர். இது மொத்த தேசிய வருமானத்தில் 7 வீதமாகும்.

No comments

Powered by Blogger.