Header Ads



புற்றுநோய் வைத்தியசாலைக்கு நிதிதிரட்டல் - குற்றச்சாட்டுக்களை மறுக்கிறார் மொஹம்மட்


‘மஹ­ர­க­ம–­அபேக் ஷா புற்­றுநோய் வைத்­தி­ய­சா­லைக்கு அத்­தி­யா­வ­சி­ய­மாகத் தேவைப்­படும் வைத்­திய உப­க­ர­ணங்­களைக் கொள்­வ­னவு செய்­வ­தற்­காக ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருக்கும் ‘பைட் கென்சர்’ திட்­டத்தின் வங்­கிக்­க­ணக்கு சுகா­தார அமைச்­சி­னாலே நிர்­வ­கிக்­கப்­ப­டு­கி­றது. அந்த வங்கிக் கணக்கின் நிதி எந்தச் சந்­தர்ப்­பத்­திலும் முறை­யற்ற விதத்தில் கையா­ளப்­ப­ட­வில்லை’ என ‘பைட் கென்சர்’ திட்­டத்தின் பணிப்­பாளர் எம்.எஸ்.எச்.மொஹம்மட் தெரி­வித்தார்.

நார­ஹேன்­பிட்டி, திம்­பி­ரி­கஸ்­யாய ஜானகி ஹோட்­டலில் நடை­பெற்ற விஷேட ஊடக மாநாட்டில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் ‘குறிப்­பிட்ட வங்கிக் கணக்­கி­லுள்ள பணத்தை தான் பெற்­றுக்­கொண்­டுள்­ள­தாக அபேக் ஷா வைத்­தி­ய­சா­லையின் பணிப்­பாளர் டாக்டர் வசந்த திசா­நா­யக்க சுமத்­தி­யுள்ள குற்­றச்­சாட்­டினை தான் வன்­மை­யாகக் கண்­டிப்­ப­தா­கவும் சட்­டத்­த­ர­ணி­க­ளுடன் ஆலோ­சித்து வைத்­தி­ய­சாலை பணிப்­பா­ள­ருக்கு எதி­ராக சட்­ட­ரீ­தி­யான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ள­வுள்­ள­தா­கவும் அவர் கூறினார்.

‘பைட் கென்சர்’ திட்­டத்தின் கணக்கு தேசிய சுகா­தார அபி­வி­ருத்தி நிதி­யத்தின் கீழ் செயற்­ப­டு­வ­தா­கவும் இந்த நிதி­யத்­துக்­காக பொது­மக்கள் வைப்புச் செய்­துள்ள 14 கோடி நிதி மிகவும் பாது­காப்­பாக உள்­ளது.

‘பைட் கென்சர்’ திட்டம் 2016 ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்­டது. புற்று நோய்க்­குள்­ளாகி கால­மான எனது மகனின் வேண்­டு­த­லுக்கு அமை­யவே இத்­திட்டம் ஆரம்­பிக்­கப்­பட்­டது. சுகா­தார அமைச்சின் அதி­கா­ரி­க­ளுடன் கலந்­து­ரை­யாடி உடன்­ப­டிக்­கை­யொன்று செய்­து­கொள்­ளப்­பட்­டது.

இதன் அடிப்­ப­டையில் சுகா­தார அபி­வி­ருத்தி நிதி­யத்தின் கீழ் ‘பைட் கென்சர்’ திட்­டத்­திற்­காக இலங்கை வங்­கியில் 71275069 எனும் கணக்கு 2016 இல் ஆரம்­பிக்­கப்­பட்­டது.

இந்தக் கணக்­கி­லுள்ள பணத்தை இந்தத் திட்­டத்­துடன் தொடர்­பு­டைய எவ­ராலும் மீளப் பெற­மு­டி­யாது. இந்த நிதிக்­கான சட்­ட­பூர்­வ­மான அதி­காரம் சுகா­தார அமைச்சு, அமைச்சின் செய­லாளர், சுகா­தார பணிப்­பாளர் நாயகம் மற்றும் ஆயுர்­வேத ஆணை­யாளர் ஆகி­யோர்­க­ளுக்கே உள்­ளன. ஒரு அமைப்­பாக இருந்து இந்தக் கணக்­கிற்கு நாம் நிதி திரட்டி வரு­கிறோம். இந்தக் கணக்­கி­லுள்ள பணத்தை சுகா­தார அமைச்சின் மூலம் கேள்விப் பத்­திரம் கோரப்­பட்டு அது கேள்­விப்­பத்­திர சபை­யினால் உரி­ய­தொகை அனு­ம­திக்­கப்­பட்ட பின்பே பெற்­றுக்­கொள்ள முடியும்.

குறிப்­பிட்ட கணக்­கிற்கு இவ்­வ­ருடம் ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி 4475674 ரூபா 2281 பேரால் வைப்புச் செய்­யப்­பட்­டுள்­ளது. ஏப்ரல் 17 ஆம் திகதி 7550901 ரூபா 3804 பேராலும் ஏப்ரல் 18 ஆம் திகதி 22235376 ரூபா 11674 பேராலும் வைப்புச் செய்­யப்­பட்­டுள்­ளது.

ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்­பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்பு இந்தக் கணக்­கிற்கு இரண்டு கோடி ரூபா­வுக்கும் அதி­க­மான பணம் 8648 பேரால் வைப்புச் செய்­யப்­பட்­டுள்­ளது. அன்று வைப்புச் செய்­யப்­பட்ட பணம் தீவி­ர­வா­தி­களால் எனக்கு வழங்­கப்­பட்­ட­தாக டாக்டர் வசந்த திசா­நா­யக்க குற்றம் சுமத்­தி­யதை அறிந்து நான் அதிர்ச்­சி­ய­டைந்தேன். 

2016 ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்ட இந்த திட்­டத்தின் மூலம் புற்­றுநோய் வைத்­தி­ய­சா­லைக்கு 25 கோடி ரூபா செலவில் பெட்ஸ்கேன் இயந்­திரம் கொள்­வ­னவு செய்­யப்­பட்­டது. இதன்­மூலம் ஆயி­ரக்­க­ணக்­கான புற்று நோயா­ளர்கள் பயன்­பெ­று­கி­றார்கள். மேலும் வைத்­தி­ய­சா­லைக்கு தேவை­யான டோம தெரபி; லீனியா எக்­ச­ல­ரேடர் ஆகிய இரு இயந்­தி­ரங்கள் கொள்­வ­னவு செய்ய நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. இதற்கு சுமார் 100 கோடி ரூபா செல­வாகும் என மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

நாங்கள் இதற்­கென நிதி திரட்டும் போது வைத்­தி­ய­சாலைப் பணிப்­பாளர் இதனை நிறுத்­து­வ­தற்கு வெளிக்­கு­ழுக்­களின் தேவைக்­காக முயற்­சிக்­கிறார்.
எங்­க­ளிடம் அர­சியல் இல்லை. இத்­திட்­டத்­துக்­காக இணைந்­துள்ள 1500 அங்­கத்­த­வர்கள் அர­சியல் நோக்கம் கொண்­ட­வர்கள் அல்லர். அப்­பாவி நோயா­ளர்­களின் நன்மைக்காகவே அவர்கள் இணைந்துள்ளனர்.

2025 ஆம் ஆண்டில் ஆசியாவிலே ஓர் சிறந்த முன்னணி வைத்தியசாலையாக அபேக் ஷா வைத்தியசாலையை மாற்றுவதே எமது இலக்காகும்.

பைட் கென்சர் திட்டத்துக்காக மக்கள் வழங்கும் பணம் ஒரு சதமேனும் எனது சொந்த வங்கிக் கணக்கிற்கோ, எமது அங்கத்தவர்களின் வங்கிக் கணக்கிற்கோ வைப்புச் செய்யப்படுவதில்லை என்பதை பொறுப்புடன் தெரிவிக்கிறேன் என்றார்.-

ஏ.ஆர்.ஏ. பரீல்

3 comments:

  1. That doctor is a racist. Take legal action against him if you have not done any wrong.

    ReplyDelete
  2. See the comments by the Sinhalese people in Sinhala Media regarding the above subject a few days back.
    They were very angry over the outburst of the so called Director of Apeksha Hospital.
    They knew it’s a jealous of a team of racist who will be loosing their Commissions from Private Sector Hospitals.
    Being a Medical Professional with Hippocrits Oath this so called Doctor should be kicked away for his Third class criticism over a team of Genuine Dedicated Gentelmen.
    Don’t get disheartened “Fight Cancer Team”.
    Truth will win.

    ReplyDelete
  3. இந்த நல்ல விடயத்திக்கும் மண்ணல்லி போட வேண்டியது தான்..

    ReplyDelete

Powered by Blogger.