Header Ads



"சுவிட்சர்லாந்து தூதரக பெண் கடத்தலை அறிந்த ஒரே நபர்"


இந்நாட்டு சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பெண் அதிகாரி ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அறிந்த ஒரே நபர் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

திஸ்ஸமஹாராமவில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார். 

அதேபோல், குறித்த சம்பவம் தொடர்பில் ராஜித்த சேனாரத்னவிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். 

எவ்வாறாயினும், இந்த சம்பவம் நம் நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கில் அரங்கேற்றப்பட்ட நாடகம் என அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

இது தொடர்பில் சர்வதேசத்திற்கு தௌிவு படுத்தவுள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பில் பொய்யான தகவல்களை வௌியிட சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரி தொடர்பு பட்டிருந்தால் அவருக்கு எதிராகவும் அரசாங்கம் என்ற வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்திருந்தார். 

No comments

Powered by Blogger.