மத கலவரத்தை தூண்டிவிடும் விக்னேஸ்வரன்
பௌத்த மக்களுக்கும், இந்து மக்களுக்கும் இடையில் மத கலவரத்தை தூண்டிவிடும் வகையில் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் செயற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை ஒரு பௌத்த நாடு என அர்த்தப்படுத்துவதற்கு எவருக்கும் அதிகாரம் இல்லை என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அண்மையில் தெரிவித்திருந்தார்.
அத்துடன், மகாவம்சம் போன்ற வரலாற்று நூல்கள் பாலி மொழியில் எழுதப்பட்ட புனைகதைகள் என அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
சி.வி.விக்னேஸ்வரனின் இந்த கருத்து கொழும்பு அரசியலில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் எஸ்.பி.திஸாநாயக்க கருத்து வெளியிடுகையில்,
“சி.வி.விக்னேஸ்வரனின் இந்த கருத்து அவசியமற்ற ஒன்றாகும். இது நாட்டிலுள்ள பௌத்தர்களுக்கும், இந்துக்களுக்கும் இடையில் மத கலவரத்தை தூண்டிவிடும் நிலைப்பாட்டிலேயே அவர் இவ்வாறான கருத்தை வெளியிட்டு வருகின்றார்.
இலங்கை பௌத்த நாடு என்பதை உலக மத தலைவர்கள் பலர் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். 74 வீத சிங்கள பௌத்த மக்கள் வாழ்கின்றமையினால் அரசியலமைப்பின் ஊடாக பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.
பிற மதங்களை பாதுகாத்து பௌத்த மதம் எழுச்சி பெறுகின்றது. தேரவாத பௌத்த மத அடிப்படை கொள்கை இலங்கையில் இருந்து தோற்றம் பெற்றது என்பதை அனைவரும் தெரிந்துக் கொள்வது அவசியம்.
இலங்கை பௌத்தமத நாடாகவே சர்வதேசத்தில் அடையாளப்படுத்தப்படுகின்றது.
இந்நிலையில், அரசியலில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் இன்று மதத்தை இலக்காக் கொண்டு மத கலவரங்களை தோற்றுவிக்க முயற்சிக்கின்றார்கள்.
ஆகையினால், வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.” என அவர் மேலும் கூறியுள்ளார்.
தமிழ் அரசியல் கலாச்சாரம் இதுதானோ?
ReplyDeleteHe is an agent of Rajapaksa.
ReplyDeleteWe all know that...
No point of giving priority for his statemebt