மஹிந்த தேசப்பிரிய பதவி விலகக்கூடாது - அரசியல் கட்சிகள் கூட்டாக வேண்டுகோள்
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து மஹிந்த தேசப்பிரியவை பதவி விலக வேண்டாம் என்று அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர்கள் இக் கோரிக்கையை மஹிந்த தேசப்பிரியவிடம் விடுத்துள்ளனர்.
அதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு வரை பதவியில் இருக்குமாறும் வலியுறுத்தியுள்ளனர்.
எவ்வாறெனினும் பதவியில் இருந்து விலகுவதற்கான தனது விருப்பத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு அறிவித்தாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
Post a Comment