Header Ads



போதைப்பொருள் கடத்தல்காரன் "களு துஸார" வுக்கு மரண தண்டனை விதிப்பு

போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுடன் தொடர்புடைய, பிரபல போதைப்பொருள் வர்த்தகர் களு துஸார என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றம் குறித்த தண்டனையை விதித்துள்ளது.

25 கிராம் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் இவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.