கட்சியின் தலைமையை பொறுப்பேற்குமாறு சஜித்திடம் வேண்டுகோள்
பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுதியான நிலைமையை தக்கவைத்துக் கொள்வதற்காக கட்சியின் தலைமைத்துவத்தை சஜித் பிரமாதசவே பொறுக்பேற்க்க வேண்டும் என்று ஐ.தே.க.வின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மத்தும பண்டார , தலத்தா அத்துகோரள , சந்ராணி பண்டார ஆகியோர் தெரிவித்தனர்.
கிருலப்பனையில் அமைந்துள்ள ஹெரான் விக்கிரமசிங்கவின் காரியாலயத்தில் இன்று -12- இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் ரஞ்சித்மத்தும பண்டார கூறுகையில்,
பாராளுமன்ற தேர்தல் ஏப்பரல் மாத்தின் பிற்பகுதியில் நடத்துவதற்கான நிலைப்பாடுகள் காணப்படுகின்றமையினால் , ஐ.தே.க. பொது தேர்தலில் வெற்றிப்பெருவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
தற்போது எதிர்கட்சி தலைவராக சஜித் அறிவிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று பிரதம வேட்பாளராகவும் அவரே அறிவிக்கப்பட வேண்டும்.
கட்சி தலைவர் ஒருவராகவும் , பிரதம வேட்பாளர் வேறொருவராகவும் இருப்பதில் எந்தவித சாத்தியபாடுகளும் இல்லை. அதனால் கட்சி தலைவர் யாரோ அவரே பிரதம வேட்பாளராகவும் அறிவிக்கப்பட வேண்டும்.
கட்சி உறுப்பினர்களிடமும் , கட்சி ஆதரவாளர்கள் மத்தியிலும் சஜித் பிரேமதாசவிற்கே பெரும் ஆதரவு இருக்கின்றது. இவருக்கு கட்சியின் தலைமைத்துவத்தை வழங்குவதையே நாங்களும் விரும்புகின்றோம்.
அதேவேளை ஜனாதிபதி தேர்தலின் போது சஜித்தின் தோல்விக்கான காரணமென்ன என்பது தொடர்பில் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
ஜனாதிபதி தேர்தலின் போது ஐ.தே.க.விற்கு பௌத்த மற்றும் மத்தியதர தரப்பினரின் வாக்குகள் போதியளவு கிடைக்கவில்லை. இதுதொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.
Post a Comment