எமது ஆதரவு கிடைக்காவிட்டால் கோத்தாபய, இலகுவாக வெற்றிபெற்றிருக்க மாட்டார்
(எம்.ஆர்.எம்.வஸீம்)
தேர்தல் வெற்றிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாரிய சக்தியாக இருந்ததாக தெரிவித்த நீதி, மனித உரிமைகள், சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா, எமது ஆதரவு கிடைக்காவிட்டால் கோத்தாபய ராஜபக்ஷ இலகுவாக வெற்றிபெற்றிருக்க மாட்டார் என்றும் கூறினார்.
ஊவா பரணகம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
Post a Comment