எதிர்க்கட்சித் தலைவராக சஜித் - ரணிலும் சம்மதித்தார்
எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை பெயரிட ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
இன்று (05) பிற்பகல் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் பிற்பகல் 03.00 மணிக்கு இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து ஏற்பட்டுள்ள பிரச்சினை மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவி உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், ஒரு வாரக்காலப்பகுதியில் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படும் என அவர் தெரிவித்தார்.
Post a Comment