Header Ads



"அரை சொகுசு பஸ் வண்டிகள் செய்யும், ஒரேயொரு நல்ல விசயம்"

பயணிகளுக்கு எந்தவித வசதிகளை ஏற்படுத்தி கொடுக்காமல் அவர்களின் பணத்தை சூறையாடும் அரை சொகுசு பஸ் வண்டிகளின் சேவையை இரத்துச் செய்வது குறித்து போக்குவரத்து அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. 

பயணிகள் போக்குவரத்து, மின்சக்தி எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர போக்குவரத்து அமைச்சு மற்றும் போக்குவரத்து ஆணைக்குழு அதிகாரிகளுடன் இது குறித்து கலந்துரையாடியுள்ளார். 

அரை சொகுசு பஸ் வண்டிகளில் பயணிகளுக்கு வழங்கப்படும் ஒரே ஒரு நம்மை பஸ் வண்டியின் யன்னல்களில் துணி துண்டுகளை தொங்கவிடுவது மாத்திரமே என இந்த கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அரை சொகுசு பஸ் வண்டிகள் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு 10,000 பயணிகளை மையப்படுத்தி நடத்திய ஆய்வில் 100 வீதமான பயணிகள் அரை சொகுசு பஸ் வண்டிகளை இரத்து செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்துடன் அந்த சேவையினூடாக எந்தவித நம்மையும் வழங்கப்படுவது இல்லை எனவும் சாதாரண பஸ்களைவிட அதில் கூடிய கட்டணம் அறவிடப்படுவதாகவும் தெரியவந்துள்ளது. 

இவ்வாறான முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு அரை சொகுசு பஸ் வண்டி சேவையை இரத்து செய்ய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

மேலும் பஸ் வண்டிகளில் அதிக சப்தத்துடன் பாடல்கள் ஒலிக்கவிடபடுவதையும் ஒரு சில ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்துக்கொள்வதையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். 

அதற்கு பதிலாக மென்மையான பாடல்கள் அடங்கிய இருவெட்டுகளை தனியார் மற்றும் அரச பேருந்துகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார். 

எனவே அரை சொகுசு பஸ் வண்டிகளில் பயணிகளை ஏமாற்றி பணம் பறிக்கும் பஸ் வண்டிகளை இனம் கண்டு அவற்றின் போக்குவரத்தை குறுகிய காலத்திற்குள் இரத்து செய்வதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.