Header Ads



வெற்றுச் சுவர்களை அலங்கரிப்பதை, ஜம்இய்யதுல் உலமா வரவேற்கின்றது


நாட்டின் ஜனாதிபதி உட்பட பலரின் பாராட்டுக்களுக்கு மத்தியில் நாட்டில் ஆங்கங்கே காணப்படும் வெற்றுச் சுவர்களை அலங்கரிக்கும் பணிகளை அரச மற்றும்  தனியார் நிறுவனங்கள், சிவில் அமைப்புக்கள் உட்பட தனி நபர்களும் ஒன்றிணைந்து திட்டமிட்ட அடிப்படையில் சித்திரங்களை வரைந்து மெருகூட்டி வருவதை அவதானிக்க முடிகின்றது. இவ்வாறான செயற்திட்டங்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வரவேற்கின்றது.

இச்சித்திர வேலைப்பாடுகள் நாட்டின் அபிவிருத்தி, நன்னடத்தைக்கான வழிகாட்டல், போன்ற விடயங்களை உள்ளடக்கும் வண்ணம் அமைவதே இன்றைய தேவையாகும். நம் நாட்டு ஓவியர்களின் கலைத்திறன்களை வெளிப்படுத்துவதில் சகல இன மக்களும் விஷேடமாக அனைத்து வாலிபர்களும் ஒத்துழைப்பதன் மூலம்   நம் நாட்டில் ஒரு சுபீட்சமான எதிர்காலத்தை  கண்டு கொள்ள முடியும் என்பது எமது எதிர்பார்ப்பாகும்.

முஸ்லிம்கள் தத்தம் பிரதேசங்களில் உள்ள வெற்றுச் சுவர்களை அடையாளப்படுத்தி இஸ்லாமிய வரயறைகளைப் பேணி நடந்து கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைவரையும் கேட்டுக் கொள்கிறது.

இந்த விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு திட்டமிட்டு ஜம்இய்யாவின் கிளைகளும், மஸ்ஜித் நிருவாகமும், ஊர் தலைவர்களும் கரிசனை  செலுத்துமாறு ஜம்இய்யா வேண்டிக் கொள்கிறது.

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்

பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

3 comments:

  1. Uruwam waraya islathil anumathikkapttulladha?

    ReplyDelete
  2. ජමියතුල් උලමා විසින් මේ ගැන විස්තර සඳහන් කරලා, සියලුම පල්ලි වලට මගපෙන්වීමක් කළ යුතුයි. එහෙම නැතුව ප්‍රකාශ කිරීම පමණක් සුදුසු නැත.

    ReplyDelete
  3. ජමියතුල් උලමා විසින් මේ ගැන විස්තර සඳහන් කරලා, සියලුම පල්ලි වලට මගපෙන්වීමක් කළ යුතුයි. එහෙම නැතුව ප්‍රකාශ කිරීම පමණක් සුදුසු නැත.

    ReplyDelete

Powered by Blogger.