மஹிந்த தேசப்பிரிய பதவியில் தொடர வேண்டும் - ஜனாதிபதி கோட்டாபய
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதற்கு மஹிந்த தேசப்பிரிய விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.
பதவி விலகல் கடிததத்தை நிராகரித்தமை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
ஜனாதிபதி சார்பில் ஜனாதிபதியின் செயலாளர் பீ.பீ. ஜயசுந்தரவினால் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல், தேர்தல் சட்டத் திட்ட திருத்தம் தொடர்பில் தற்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதன் காரணமாக மஹிந்த தேசப்பிரிய தொடர்ந்தும் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் செயற்படுவது அவசியம் என்பது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தீர்மானம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment