'சுத்தமான இலங்கை' இன்று அமைச்சரவையில் - குப்பை குவியல்கள் இருக்க முடியாது.
அனைத்து அதிகார பிரதேசங்களுக்கும் சம அளவிலான சுற்றுச்சூழலை சுத்தம் செய்யும் திட்டம் செயற்படுத்தப்படுவதாக அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
முழு நாட்டையும் சுத்தமாக வைத்துக் கொள்ள ´சுத்தமான இலங்கை´ என்ற திட்டமொன்றை தயாரித்துள்ளோம். அது தொடர்பான அமைச்சரவை பத்திரம் நாளை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதன் காரணமாக, நகர சபை , பிரதேச சபை அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசங்களில் தம்மால் செயற்படுத்தக் கூடிய இலகுவான மற்றும் பொருத்தமான திட்டம் ஒன்றை எமக்கு பெற்றுத் தருமாறு உள்ளூராட்சி பிரதானிகளிடம் நாம் கோருகின்றோம்.
நாம் நகரத்தினை கட்டாயமாக சுத்தம் செய்ய வேண்டும். குப்பை குவியல்கள் இருக்க முடியாது. ஜனாதிபதியின் கருத்தும் அதுவே.
இந்த திட்டத்தில் அரசியல் இல்லை. இதன் நன்மையை நாம் பொதுமக்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும். வீதி ஓரங்களில் மரக் கன்றுகளை நாட்ட விரும்பினால் அதற்கு தேவையான மரக்கன்றுகளை வனப் பாதுகாப்பு திணைக்களத்திடம் பெற்றுக் கொள்ள முடியும். நான் அதற்கான உத்தரவினை வழங்கியுள்ளேன். சிங்கள பிரதேசமா, தமிழ் பிரதேசமா, முஸ்லிம் பிரதேசமா என்பது எமக்கு பிரச்சினை இல்லை. அனைத்து பிரதேசங்களிலும் சம அளவில் இந்த செயற்திட்டத்தை நாம் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
Well Done
ReplyDeletePlease don’t plant trees on the side of streets. Because when it grows, some street vendor put a stall under that tree other vendors will follow him as well.
ReplyDelete