சஜித்திற்கு ஆதரவளிக்க தயாராக இருந்த மைத்திரி - இறுதி நேரத்தில் முடிவை மாற்றினார்
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்திருந்ததாக முன்னாள் ஜனாதிபதிக்கு நெருக்கமான பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பொலன்நறுவையில் நடைபெற்ற சஜித் பிரேமதாசவின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்ட மேடையில் ஏற மைத்திரிபால சிறிசேன தயாராக இருந்தாகவும் அவர் கூறியுள்ளார்.
அந்த கூட்டத்தில் ஆற்ற வேண்டிய உரை சுருக்கமாக எழுதி தருமாறு முன்னாள் ஜனாதிபதி தன்னிடம் கூறியதாகவும் அந்த கோரிக்கையை தயவுடன் நிராகரித்ததுடன் அவரது தீர்மானத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டதாகவும் அந்த பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதியில் மைத்திரிபால சிறிசேன, சஜித்தின் தேர்தல் பிரசாரக் மேடையில் ஏறவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த பேராசிரியர் கடந்த அரசாங்கத்தில் உயர் பதவி ஒன்றை வகித்த நபர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment