எதிர்கட்சித் தலைவர் குறித்து, நாளை இறுதித் தீர்மானம் - ஐதேக பாராளுமன்ற குழு கூட்டமும் நடக்கிறது
எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் நாளைய தினம் இறுதி தீர்மானம் எட்டப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
ஜா எலவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் கட்சியினுள் எவ்வித நெருக்கடி நிலையும் இல்லை என தெரிவித்த அவர், கட்சியின் அனைவரும் ஒருமித்த ஒரு முடிவை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
2
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு கூட்டம் நாளை (05) இடம்பெறவுள்ளது.
கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது எதிர்க் கட்சித் தலைவர் பதவி குறித்து பொது இணக்கப்பாடு எட்டப்படவுள்ளது.
அத்துடன் கட்சியின் எதிர்க்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பிலும் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.
சஜித் உட் கட்சி விவகாரத்தில் கட்ச்சிக்காரரின் ஆதரவினாலும் பணபலத்தினாலும் மட்டுமே வெற்றி பெற முடியும்.கூட்டணி கட்ச்சிகள் தமது நலன்கலைப் பாதுகாக்க ஒதுங்கியிருப்பது நல்லது. உண்மையில் இது நரி ரணிலுக்கும் எருது சஜித்துக்கும் மூடப்பட்ட ஐதேகவின் நான்கு சுவருக்குள் இடம்பெறுகிற ஜீவ மரணப் போட்டியாகும். வெளியில் கூட்டணியில் யார் பிரபலம் என்கிற கேழ்விகளுக்கு இங்கு இடமில்லை. இத்தகைய சூழலில் கட்ச்சி அமைப்பு செல்வாகும் குதிரைப் பேரங்களுக்கான பணபலமும் மட்டுமே வெற்றியை தீர்மானிப்பதில் பெரும் பங்களிக்கும். ரணில் வெற்றிபெற்றால் அது அடுத்த தேர்தலில் ஐதேகவுடன் கூட்டணிவைக்க காத்திருக்கும் சிறுபாண்மை இனக் கட்ச்சிகளுக்கு பாதகமானதாக அமையும்.
ReplyDeleteஜெயபாலன் ஐய்யா -உண்மைதான்
ReplyDeleteசிறுபான்மை காட்சிகள் தனது செல்வாக்கினை தக்கவைக்க வேண்டுமென்றால்
தனித்து நிற்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இந்த ஐக்கிய தேசிய முன்னனியின் தலைமைப்பீட போட்டியானது அவர்களது உள்வீட்டு விவாககாரம் - ரணில் விட்டுக்கொடுக்காது மிரண்டாவாதமாக கட்சி தலைமையையும் எதிர்க்கட்சி தலைமையையும் தூக்கிக்கொண்டு எதிர் வரும் தேர்தலில் குதித்தாள்- இனிவரும் காலங்களில் ஐக்கிய தேசிய முன்னணி என்ற ஒன்றின் அடையாளம் கூட கண்டுகொள்ள முடியாத அளவு படுதோல்வி அடையும்.
தமிழர் விடுதலை கூட்டணியும் முஸ்லீம் காங்கிரஸ் உம் All சிலோன் மக்கள் காங்கிரஸ் உம் இணைந்து தேர்தலில் குதிப்பதால் ஏட்படும் விளைவுகள் தான் என்ன ?- மர்சூக் மன்சூர் - தோப்பூர் -07
ஜெயபாலன் ஐய்யா -உண்மைதான்